Euro 2020 | யூரோ 2020: ரகீம் ஸ்டெர்லிங்கின் ஒரே கோல்: செக். குடியரசை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு இங்கிலாந்து தகுதி

கோல் அடித்த ஸ்டெர்லிங்கை கட்டிப்பிடிக்கும் இங்கிலாந்து வீரர்.

வெம்ப்லியில் நேற்று நடைபெற்ற யூரோ கோப்பைக் கால்பந்துப் போட்டியின் குரூப் டி ஆட்டத்தில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் செக்.குடியரசு அணியை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

  • Share this:
    நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து அதன் இப்போதைய ஆட்டத்தை வைத்துக் கொண்டு பிரான்ஸ், ஜெர்மனி, போர்ச்சுகல் இடம்பெற்றுள்ள குரூப் ஆப் டெத் எஃப் பிரிவின் ரன்னர் அணியை சந்தித்தால் நிச்சயம் தோல்வி அடைந்து வெளியேறும் வாய்ப்புத்தான் அதிகம், அப்படி மாறாக எதுவும் நடந்தால் அது இங்கிலாந்தின் அதிர்ச்சி வெற்றியாகவே இருக்கும்.

    இங்கிலாந்து அணியில் கொஞ்சம் வேகம், சாதுரியம் காட்டும் ரகீம் ஸ்டெர்லிங் 12வது நிமிடத்தில் ஜாக் கிரீலிஷ் அடித்த பிரமாதமான கிராஸை தலையா முட்டி கோலுக்கு அருகிலிருந்து கோலாக்கினார், இதுவே பிறகு வெற்றிக்கான கோலாக அமைந்தது.

    தொடக்கத்திலேயே 2 நிமிடங்களில் இதே ஸ்டெர்லிங் முயற்சி ஒன்று கோல் போஸ்ட்டைத் தாக்கியது. இங்கிலாந்து அணியில் மேசன் மவுண்ட், பென் சில்வெல் இல்லை. இங்கிலாந்து அணி முதல் பாதியில் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்தின் 19 வயது வீரர் புகாயோ சாகா பிரமாதமாக ஆடினார். சொதப்பலாக ஆடி வரும் ஹாரி கேன் நேற்று பரவாயில்லை ரகம், அவர் அடித்த ஒரு கோல் முயற்சியும் தடுக்கப்பட்டது.



    இரண்டாவது பாதியில் செக்.குடியரசிடம் பந்து அதிகம் இருந்தது, பதிலி வீரர் தாமஸ் பெகார்ட் கோல் நோக்கி அடித்த ஷாட் வைடாகச் சென்றது. கடைசி தருணத்தில் இங்கிலாந்து வீரர் ஜோர்டான் ஹெண்டர்சன் அடித்த கோல் ஆஃப் சைடு ஆனதால் மறுக்கப்பட்டது. இதே பிரிவில் ஸ்காட்லாந்தை 3-1 என்று வீழ்த்தி குரேஷியா 2ம் இடத்துக்கு முன்னேறி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற செக்.குடியரசு அணி 3ம் இடத்தில் உள்ளது.

    இங்கிலாந்து அணி இந்தப் போட்டிக்கு முன்னரே நாக் அவுட் சுற்றை உறுதி செய்ததால் அழுத்தம் இல்லாமல் சுதந்திரமாக ஆடியது.

    19வயது இளம் வீஅர் புகாயோ சாகா நடுக்களத்திலிருந்து இரண்டு செக். வீரர்களைக் கடைந்து பந்தை வேகமாக எடுத்து வந்தார். அதை அருமையாக பாஸ் செய்ய அங்கு கிரீலிஷ் பந்தைப் பெற்றார். அங்கு சிலபல ட்ரிப்ளிங்குகளுக்குப் பிறகு பந்தை தூக்கி அடித்தார் அங்கு கோல் அருகே 3 அடியிலிருந்து ஸ்டெர்லிங் தலையால் முட்டி கோலாக மாற்றினார். ஸ்டெர்லிங் ஆடும் 19 சர்வதேச கால்பந்து போட்டிகளில் அவரது 14வது கோல் ஆகும் இது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    செக் குடியரசின் லூகாச் மாசோபஸ்ட் இங்கிலாந்தை ஆட்டிப்படைத்தார். 35வது நிமிடத்தில் செக். குடியரசு வீரருக்கு கோல் வாய்ப்புக் கிடைத்தது. ஜாகப் ஜாங்க்டோ அடித்த ஷாட்டை இங்கிலாந்தின் ஷா தைரியமாகத் தடுக்க செக்.குடியரசு வீரர் சூசெக் மீண்டும் அடித்த ஷாட் வைடாகிப் போனது.

    பிறகு செக். குடியரசின் முயற்சிகள் தடுக்கப்பட்டு இங்கிலாந்து 1-0 என்று வெற்றி பெற்றது. இறுதி 16 சுற்றில் குரூப் எஃப்-ன் ரன்னர் அணியைச் சந்திக்க வேண்டி வரும் .
    Published by:Muthukumar
    First published: