Euro 2020: எரிக்சன் உடல்நிலை கவலையால் தோற்ற டென்மார்க்: பின்லாந்து வரலாற்று வெற்றி

வெற்றி மகிழ்ச்சியில் பின்லாந்து.

யூரோ 2020 கால்பந்து ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில் டென்மார்க் வீரர் எரிக்சன் பேச்சு மூச்சின்றி மைதானத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது, அவர் உடல் நிலை பற்றிய கவலை அதிகரிக்க ஆட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கிய போது டென்மார்க் அணி பரிதாபமாக 0-1 என்ற கோல் கணக்கில் பின்லாந்து அணியிடம் தோல்வி கண்டது.

  • Share this:
    யூரோ 2020 கால்பந்து ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில் டென்மார்க் வீரர் எரிக்சன் பேச்சு மூச்சின்றி மைதானத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது, அவர் உடல் நிலை பற்றிய கவலை அதிகரிக்க ஆட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கிய போது டென்மார்க் அணி பரிதாபமாக 0-1 என்ற கோல் கணக்கில் பின்லாந்து அணியிடம் தோல்வி கண்டது.

    பின்லாந்து அணி முதல்வெற்றியைப் பெற்று வரலாறு படைத்தது.

    கோபன்ஹேகன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 42வது நிமிடத்தில் ஒரு ஷார்ட் பாஸ் செய்த கிறிஸ்டியன் எரிக்சன் அப்படியே குப்புற மயங்கி விழுந்தார். அவருக்கு முதலுதவி அளித்தும், இருதயத் துடிப்பை மீட்கும் முதலுதவிகள் செய்யப்பட்ட போதும் பேச்சு மூச்சின்றி இருந்தார், இதனையடுத்து அவர் மைதானத்திலிருந்து ஸ்ட்ரெச்சர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பேச்சு மூச்சு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து ஆட்டம் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. டென்மார்க் கால்பந்து கூட்டமைப்பு கிறிஸ்டியன் எரிக்சன் கண்விழித்தார் என்ற செய்தியை அறிவித்தவுடன் போட்டி தொடங்கியது. இதனையடுத்து இரு நாடுகளும் விளையாட்டைத் தொடர சம்மதித்தன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    டென்மார்க் ஆட்டம் நிறுத்தப்படுவதற்கு முன்பாக ஆதிக்கம் செலுத்தியது, அதுவும் குறிப்பாக முதல் 15 நிமிடங்களில் 3 முறை கோலை நோக்கி அடிக்கப்பட்ட ஷாட்களில் இரண்டை பின்லாந்து கோல் கீப்பர் அபாரமாகத் தடுத்தார். அதன் பிறகுதான் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஆட்டம் மீண்டும் தொடங்கிய போதும் டென்மார்க் ஆதிக்கம் செலுத்தியது.

    டென்மார்க் அணி 22 முறை கோலை நோக்கி ஷாட் முயற்சி செய்ததில் எதுவும் வெற்றியடையவில்லை, மாறாக பின்லாந்துக்குக் கிடைத்த ஒரே வாய்ப்பை அதன் வீரர் ஜோயெல் போயன்பலோ தலையால் முட்டி அடித்த கோல் பின்லாந்துக்கு ஒரு அரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது.

    Also Read: Euro 2020 Christian Eriksen: மயங்கி விழுந்து பேச்சு மூச்சின்றிப் போன டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் : சிகிச்சையில் உயிர் பிழைத்தார்

    கடைசியில் 16 நிமிடங்களுக்கு முன்னதாக பெனால்டி வாய்ப்பு கிடைத்தது அதையும் டென்மார்க் வீரர் ஹோய்பெர்க் சொத்தையாக அடிக்க பின்லாந்து கீப்பர் லூகாச் ஹ்ரடெக்கி தடுத்தார்.

    ஆட்டத்தில் 0-1 என்று டென்மார்க் தோற்று வெளியேறும்போது தலையைத் தொங்கப்போட்ட படி வருத்தத்தில் வெளியேற, பின்லாந்து வீரர்கள் அதன் குறைந்த ரசிகர்களின் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் குதித்தனர்.

    மைதானத்திலிருந்து ஒரு கிமீ தூரத்தில் தன் நாட்டு வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகையில் டென்மார்க் வீரர்களுக்கு கால்பந்தா பெரிது!!
    Published by:Muthukumar
    First published: