Euro 2020: மகா அறுவை ஆட்டத்தில் குரேஷியாவை பழிதீர்த்து இங்கிலாந்து வெற்றி- ஸ்டெர்லிங் கோலினால் பிழைத்தது

கோல் அடித்த ஸ்டெர்லிங்கை பாராட்டும் இங்கிலாந்து வீரர்கள்.

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்றைய மகா அறுவை ஆட்டத்தில் குரேஷியாவை 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது. இதன் மூலம் யூரோ கோப்பை கால்பந்தில் இங்கிலாந்து அணி தன் முதல் போட்டியில் முதல் முறையாக வென்றது.

  • Share this:
2018 உலகக்கோப்பை அரையிறுதியில் குரேஷியாவிடம் வாங்கிய உதைக்கு பழி தீர்த்தது இங்கிலாந்து என்று கூறத் தோன்றினாலும், 2018 குரேஷியா வேறு, இந்த குரேஷியா வேறு என்றே கூற வேண்டும்.

இரு அணிகளும் மகா மந்தமான ஆட்டத்தை ஏற்படுத்தி சோர்வூட்டினர். தங்களுக்குள்ளேயே பேக் பாஸ் செய்து கொண்டு இரு அணிகளும் சோர்வூட்டின, இங்கிலாந்தின் இளம் வீரர்கள் கொஞ்சம் ஆட்டத்தை ஆக்ரோஷமாக நகர்த்தியதால் தொடக்க நிமிடங்கள் கொஞ்சம் விறுவிறுப்பாக அமைந்தது.

இங்கிலாந்து அணியின் கால்வின் பிலிப்ஸ் இந்த ஆட்டத்தின் சிறந்த வீரர் எனலாம். கைல் வாக்கரிடமிருந்து வந்த சிறிய பாஸ் ஒன்றை குரேஷிய தடுப்பு வீரர்களிடமிருந்து காத்து எடுத்துச் சென்று பிரமாதமாக பாஸ் செய்ய ஸ்டெர்லிங் அதனை குரேஷிய கோல் கீப்பர் லிவாகோவிச்சைக் கடந்து கோலாக மாற்றினார், இதுதான் ஒரே கோல், வெற்றிக்கான கோலும் இதுவே.

Also Read: Copa America 2021: பிரேசில் அபார வெற்றி: வெனிசுலாவின் 8 வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பின்னடைவு

2018 உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதியில் இங்கிலாந்தை தோற்கடித்த குரேஷியா அணியின் 7 வீரர்கள் இந்த ஆட்டத்திலும் இருந்தனர். குரேஷியாவின் நட்சத்திர வீரர் லூக்கா மோட்ரிச்சை சமாளிப்பது எப்படி அவரது சைடு கிக்குகளை எப்படி தடுப்பது போன்ற விஷயம் தான் இங்கிலாந்துக்கு முக்கியம். நடுக்களத்தில் குரேஷியாவின் 3 வீரர்களை கட்டுப்படுத்தி விட்டால் வெற்றி என்ற உத்தியில் இங்கிலாந்து வெற்றி கண்டது என்றே கூற வேண்டும்.

ரசிகர்கள் முழு ஆதரவு இங்கிலாந்துக்குத்தான் ஏனெனில் போட்டி இங்கிலாந்தில்தான் நடந்தது. ஆட்டம் தொடங்கிய 5 நிமிடங்களில் இடது புறத்திலிருந்து எல்லைக்கோட்டிலிருந்து வந்த த்ரோவை ஸ்டெர்லிங் பிரமாதமாக எடுத்துச் சென்று இங்கிலாந்தின் பிலிப் ஃபோடனிடம் அளிக்க அவருக்கும் குரேஷிய வீரர் ஜோஸ்கோ குவார்டியாலுக்கும் நேருக்கு நேர் சவால் ஏற்பட்டது. ஆனால் ஃபோடன் உடைத்துக் கொண்டு குரேஷிய கோல் நோக்கிப் பாய்ந்தார். மூலையிலிருந்து ஒரு ஷாட்டை அடித்தார் ஃபோடன் கோல் போஸ்ட்டில் பட்டு பந்து திரும்பியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே போல் கால்வின் பிலிப்சும் சுறுசுறுப்பு காட்டினார். மற்றபடி இரு அணிகளும் மந்தமாக ஆடின, ஆட்டத்தை வேண்டுமென்றே இரு அணிகளும் மெதுவாக்கின. ஆனாலும் இங்கிலாந்து அவ்வப்போது சில சவால்களை ஏற்படுத்தின மவுண்ட் அடித்த கிராஸை இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் அடிக்கப் போக அதனை குரேஷிய விரர் குவார்டியோல் அபாரமாக இடையூறு செய்து வெளியே தள்ளினார். இவான் பெரிசிச், மோட்ரிச் என்று அனுபவ வீரர்கள் இருந்தும் இங்கிலாந்தின் மந்தமான ஆட்டத்தினால் குரேஷியாவின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டது.

எப்படியோ இங்கிலாந்தும் ஒரு கோல் போதும் என்று ஆடியது, அந்த ஒரு கோலையும் போட்டு சமன் செய்ய வேண்யதில்லை என்பது போல் குரேஷியாவும் ஆடியது, மொத்தத்தில் இங்கிலாந்து வென்றதில் ரசிகர்களுக்கு உற்சாகம் இருந்தாலும் கால்பந்து ரசிகர்களாக இது ஒரு நல்ல கால்பந்தாட்டமாக இல்லை என்பதே உண்மை.
Published by:Muthukumar
First published: