• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Euro 2020 Final | நிறைய பாஸ்தா சாப்பிடுங்கள்: இங்கிலாந்து ரசிகர்களை கடுப்பேற்றிய இத்தாலி வீரர்

Euro 2020 Final | நிறைய பாஸ்தா சாப்பிடுங்கள்: இங்கிலாந்து ரசிகர்களை கடுப்பேற்றிய இத்தாலி வீரர்

இத்தாலி கோல்.

இத்தாலி கோல்.

யூரோ கோப்பைக் கால்பந்து இறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் இங்கிலாந்து ரசிகர்களை நோக்கி இத்தாலி உணவான பாஸ்தா அதிகம் சாப்பிடுங்கள் என்று கடுப்பேற்றினார்.

  • Share this:
    யூரோ கோப்பை கால்பந்து 2020 தொடரில் இத்தாலி அணி இங்கிலாந்தை பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஐரோப்பிய சாம்பியன் ஆனது.

    இதனால் 1966 உலகக்கோப்பைக்குப் பிறகு ஒரு பெரிய கோப்பையை வெல்ல கனவு கண்டு கொண்டிருந்த இங்கிலாந்து அணி தகர்க்கப்பட்டது, அதன் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர், தொடர் முழுதும் தோற்காமல் வந்து விட்டு கடைசியில் ஒரு தோல்வி என்று இங்கிலாந்து முடிய, ஒரு தோல்வி கூட அடையாத தொடர்ச்சியை காப்பாற்றியது இத்தாலி.

    இத்தாலி கோல் கீப்பர் டோனரூமா தொடரின் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல்டன் பூட் என்ற தங்கக் காலணி விருதைப் பெற்றார். இங்கிலாந்து கோல் கீப்பர் கோல்டன் கிளவ் விருது பெற்றார்.

    முன்னதாக 4 முறை உலக சாம்பியனான இத்தாலி அணி இதற்கு முன்பு ஒரே ஒரு முறை யூரோ கோப்பையை (1968-ம் ஆண்டு) வென்றுள்ளது. களத்தில் அதிரடியான தாக்குதல் பாணியை கையாளுவதில் கில்லாடியான இத்தாலி அணி இந்த தொடரில் மட்டும் 12 கோல்களை போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மகுடம் சூடியுள்ள இத்தாலி அணிக்கு ரூ.89 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது. போட்டி கட்டணம், லீக் சுற்று, நாக்-அவுட் சுற்று வெற்றிகள் எல்லாவற்றையும் சேர்த்தால் மொத்தத்தில் கிட்டத்தட்ட ரூ.300 கோடியை இத்தாலி அணி பரிசாக அள்ளியது.

    போட்டியின் 67வது நிமிடத்தில் இத்தாலி அணி வீரர் போனுக்சி அடித்த கோல் ஆட்டத்தில் திருப்பு முனையாக அமைந்து வெற்றியை நிர்ணயித்தது. யூரோ இறுதி போட்டியில் மிக வயது முதிர்ந்த (34 வயது) கோல் அடித்தவரான போனுக்சி, யூரோ இறுதி போட்டி வரலாற்றில் அதிகளவில் (18 முறை) பங்கேற்றவர் என்ற பெருமை கொண்டவர்.

    அவர் போட்டியின் நடுவில் இங்கிலாந்து ரசிகர்களை நோக்கி நிறைய பாஸ்தா சாப்பிட வேண்டும். நிறைய பாஸ்தா சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது என கிண்டலாக கூறினார். அதன்பின்னர், கேமிரா ஒன்றின் முன்னால் வந்து, கோப்பை ரோம் நகருக்கு வந்து கொண்டிருக்கிறது என்றும் கூறி இங்கிலாந்து ரசிகர்களை கடுப்பேற்றினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: