• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • Euro 2020 | சோகக் காட்சியில் தொடங்கி, ‘ஹேப்பி என்டிங்’ நோக்கி டென்மார்க்: யூரோ காலிறுதியில் செக். குடியரசு அணியை வீழ்த்தியது

Euro 2020 | சோகக் காட்சியில் தொடங்கி, ‘ஹேப்பி என்டிங்’ நோக்கி டென்மார்க்: யூரோ காலிறுதியில் செக். குடியரசு அணியை வீழ்த்தியது

மகிழ்ச்சியில் டென்மார்க் அணி.

மகிழ்ச்சியில் டென்மார்க் அணி.

டென்மார்க் அணி தற்போது செக். குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதியில் இங்கிலாந்தைச் சந்திக்கிறது.

 • Share this:
  யூரோ கோப்பை கால்பந்து தொடரின் தன் முதல் ஆட்டத்தில் முக்கிய வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் மைதானத்தில் மாரடைப்பு ஏற்பட்டு பேச்சு மூச்சின்றி மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உயிர் பிழைத்த சோகக்காட்சியிலும், முதல் போட்டி தோல்வி என்ற துயரத்திலும் தொடங்கிய டென்மார்க் அணி தற்போது செக். குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதியில் இங்கிலாந்தைச் சந்திக்கிறது.

  கோப்பையை வெல்லும் ஹேப்பி என்டிங் நோக்கி டென்மார்க் முன்னேறியுள்ளது, எரிக்சனுக்குச் செய்யும் மிகப்பெரிய நல்ல காரியம் இதுவே என்று டென்மார்க் வீரர்கள் நினைப்பது அவர்கள் ஆட்டத்தின் ஆக்ரோஷத்தில் பிரதிபலித்தது.

  பாக்கூவில் நடைபெற்ற இந்த காலிறுதி ஆட்டத்தில் டென்மார்க் அணி 5வது நிமிடத்திலேயே தாமஸ் டெலானி மூலம் முன்னிலை பெற்றது. பிறகு 42வது நிமிடத்தில் காஸ்பர் டோல்பெர்க் மூலம் 2வது கோலை அடித்தது, ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் செக்.குடியரசின் அற்புத வீரர், மறக்க முடியாத கோலை அடித்த பாட்ரிக் ஷிக் ஒரு கோலை அடித்தார்.

  டென்மார்க் ரசிகர்கள் கிறிஸ்டியன் எரிக்சனின் 10ம் எண் டிசர்ட்டை குறிக்கும் விதமாக “For Christ10an” என்று பேனருடன் காட்சியளித்தனர்.

  இதையும் படிக்கலாமே: Euro 2020 England vs Ukraine | அரையிறுதியில் இங்கிலாந்து! உக்ரைனை 4-0 என்று தவிடுபொடியாக்கியது : வெளுத்துக் கட்டிய ஹாரி கேன்

  ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் ஜென்ஸ் ஸ்ட்ரைஜர் கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு அவுட்ஸ்விங்கர் ஷாட்டை காற்றில் தூக்கி அடித்தார். பெனால்டி ஸ்பாட்டில் நின்று கொண்டிருந்த தாமஸ் டெலானி தலையால் முட்டியது செக். குடியரசின் அபார கோல் கீப்பர் வாக்லிக்கிற்கு அகப்படாமல் கோல் ஆனது.

  இடைவேளைக்கு சற்று முன் 42வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் ஜோக்கிம் மாலி இடது ஓரத்திலிருந்து தன் வலது காலின் வெளிப்புறப் பகுதியினால் ஒரு கிராஸ் செய்து பந்தை உள்ளுக்குள் தூக்கி விர அங்கு மார்டின் பிராத்வெய்ட் தலையால் முட்ட முயற்சி செய்து தோல்வி அடைய, அங்கு காஸ்பர் டோல்பர்க் தன்னை தடுக்க நின்று கொண்டிருந்த செக் வீரரைக் கடந்து மீண்டும் வாக்லிக்கால் ஒன்றும் செய்ய முடியாத கோலை அடிக்க டென்மார்க் 2-0 என்று முன்னிலை பெற்றது.

  2வது பாதியில் 49வது நிமிடத்தில் செக். குடியரசின் அபார ஸ்ட்ரைக்கர் பாட்ரிக் ஷிக், யூரோ 2020-யில் தன் 5வது கோலை அடித்து கிறிஸ்டியானொ ரொனால்டோவை சமன் செய்தார். ஆனால் செக் குடியரசின் ஒரே கோலாக இது முடிந்தது, அவர்களின் அரையிறுதிக் கனவும் முடிந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  யூரோ கோப்பையை 1992ல் வென்ற டென்மார்க் அதன் பிறகு அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இப்போது அரையிறுதியில் இங்கிலாந்தின் கடும் சவாலை எதிர்கொள்கிறது, அதாவது இங்கிலாந்துக்கும் பெரிய சவால் காத்திருக்கிறது.

  எரிக்சன் இருதய அடைப்பினால் மயங்கி விழ பின்லாந்திடம் 0-1 என்று தோற்ற சோகக்காட்சியில் தொடங்கிய டென்மார்க்கின் ஆட்டம் தற்போது ஹேப்பி எண்டிங் ஆகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: