நிறவெறி: நாடே கண்கலங்கிய 9 வயது சிறுவனின் கடிதம்! இங்கிலாந்து கால்பந்து வீரர் மார்கஸ் ராஷ்போர்டுக்கு ஆதரவாக உருக்கம்

மார்கஸ் ராஷ்போர்டு.

யூரோ 2020 தோல்விக்குப் பிறகு பெனால்டி கோல் வாய்ப்புகளை தவற விட்ட இங்கிலாந்து வீரர்கள் ஜேடன் சாங்கோ, மார்கஸ் ராஷ்போர்டு, புகாயோ சாக்கா ஆகியோர் மீது நிறவெறி வசை செய்யப்பட்டது. இதில் மார்கஸ் ராஷ்போர்டுக்கு 9 வயது சிறுவன் எழுதிய கடிதம் நாட்டையே கண்கலங்கச் செய்துள்ளது.

 • Share this:
  யூரோ கால்பந்தின் இறுதிப்போட்டியில் இத்தாலி அணியை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி பெனால்டியில் 3 கோல் வாய்ப்புகளை தவறவிட்டு 3-2 என்ற கோல் கணக்கில் தோற்று கோப்பையை நழுவ விட்டதையடுத்து கருப்பின வீரர்களான மார்கஸ் ராஷ்போர்டு, புகாயோ சாக்கா, ஜேடன் சாங்கோ ஆகியோர் மீது ரசிகர்கள் நிறவெறி வசைகளை ஏவி விட்டனர்.

  இதற்கு உலகம் முழுதிலிமிருந்து கண்டனக்குரல்கள் எழுந்தன. 2 கோல்களை இத்தாலி கோல் கீப்பர் தடுத்து விட்டார், ராஷ்போர்டு அடித்த ஷாட் கோல் போஸ்ட்டைத் தாக்கியது, இதனையடுத்து பெனால்டியில் கோட்டை விட்ட வீரர்களின் இன அடையாளத்தை, நிற அடையாளத்தை குறிவைத்து ரசிகர்கள் தாக்கினர்.

  இதில் மார்கஸ் ராஷ்போர்டு இங்கிலாந்து ராணியிடம் எம்.பி.இ. பட்டம் பெற்றவர். இவரைத்தான் அதிகம் நிறவெறி வசைபாடினர். ஆனால் இவர் சமூக சேவைகள் பல செய்தவர்.

  இதையும் படிங்க: நிறவெறிக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபடவேண்டும் - பால் போக்பா

  Also Read:  Euro 2020: தோல்விக்காக நிறவெறி வசையை ஒருபோதும் ஏற்க முடியாது: இங்கிலாந்து கோச் சவுத்கேட் காட்டம்


   

  இதனையடுத்து ஆயிரக்கணக்கான சிறுவர்கள் சமூக வலைதளங்களில் இவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதில் டெக்ஸ்டர் ரொஷியர் என்ற சிறுவன், “டியர் மார்கஸ் ரஷ்போர்ட், கடந்த ஆண்டில் ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்து என்னை கவர்ந்தீர்கள். நேற்று, அனைத்து விமர்சனங்களையும் அமைதியாக எதிர்கொண்டு மீண்டும் என்னை நீங்கள் பிரமிப்படைய செய்துள்ளீர்கள். உங்களை எண்ணி பெருமையடைகிறேன். மோசமான சம்பவங்களை புறக்கணியுங்கள்.. நீங்கள் என்றும் எங்களின் நாயகன் தான்” என்று எழுதியது வைரலாகி வருகிறது.

  இந்தச் சிறுவனின் இந்த உருக்கமான கடிதத்தைச் சுட்டிக்காட்டி பலரும் இதுதான் இங்கிலாந்தின் உண்மையான முகம் நிறவெறி அல்ல என்று பதிவிட்டு வருகின்றனர்.

  இந்தக் கடிதத்தை வாசித்த ஊடகவியாலாளர் நேரலையில் கண்ணீர் உகந்தார். நாடே கண்கலங்கிய இந்தத் தருணத்தை இதுதான் இங்கிலாந்து என்று நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
  Published by:Muthukumar
  First published: