Euro 2020| யூரோ கோப்பை: 99-வது விநாடியில் டென்மார்க் அடித்த சாதனை கோல் வீண்: டென்மார்க் ரசிகர்களின் இருதயத்தை நொறுக்கிய பெல்ஜியத்தின் வெற்றி

வெற்றி கோலை அடித்த பெல்ஜியத்தின் டிபுருய்னை பாராட்டும் வீரர்கள்.

கிறிஸ்டியன் எரிக்சன் அன்று நடு ஆட்டத்தில் மாரடைப்பினால் மயங்கி கீழே விழுந்து அன்று பின்லாந்திடம் தோல்வி கண்ட டென்மார்க் நேற்று 2வது நிமிடத்திலேயே கோல் அடித்து உலகின் நம்பர் 1 பெல்ஜியம் வயிற்றில் புளியைக் கரைத்தாலும் மீண்டெழுந்த பெல்ஜியம் டி புருயினின் கோலினால் 2-1 என்று டென்மார்க்கை வீழ்த்தியது.

  • Share this:
குரூப் பி போட்டியான இதன் ஆட்டம் தொடங்கி 2வது நிமிடத்திலேயே டென்மார்க் வீரர் யூசுப் போல்சென் அடித்த கோல் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் யூரோ கோப்பையின் 2வது அதிவிரைவு கோலானது. உண்மையில் இந்த கோலை அடிக்கும் போது 99 விநாடிகள்தான் கெடிகாரம் காட்டியது.

டென்மார்க்கின் நடுக்கள வீரர் பியர் எமில் பெல்ஜியத்திடமிருந்து பந்தை எடுத்துச் சென்று யாரும் கவர் செய்யப்படாமல் இருந்த யூசுப் போல்சனிடம் அடிக்க இவரது வலது கால் ஷாட் கீழ் மூலையில் கோலாக பெல்ஜியம் அதிர்ச்சியடைந்தது.

முதல் பாதியில் பெல்ஜியம் சுமாராகத்தான் ஆடியது. ஆனால் 2வது பாதி தொடங்கி 9வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் நட்சத்திர வீரர் ரொமிலு லுகாகோ எதிர்த்தாக்குதல் ஆட்டத்தில் மின்னல் வேகம் காட்டி சக்தி வாய்ந்த ஷாட்டில் டி புருய்னிடம் அடிக்க, டி புருய்ன் பந்தை பக்கவாட்டில் தோர்கன் ஹசார்டுக்கு அடிக்க அவர் அடித்த கோல் டென்மார்க்கின் சாதனை கோலை சமன் செய்தது.

Also Read: யூரோ கோப்பை: 5 நிமிடங்களில் 2 கோல்கள் அடித்த உக்ரைன் வெற்றி; உயிரைக்கொடுத்து ஆடிய நார்த் மேசிடோனியா தோல்விஆட்டத்தின் 70வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் இன்னொரு ஸ்டார் டி புருய்ன் டென்மார்க் ரசிகர்களின் இருதயத்தை நொறுக்கினார். பாக்ஸுக்கு அருகில் பந்தைப் பெற்ற டிபுருய்ன் இடது காலால் பயங்கரமான ஒரு ஷாட்டை அடிக்க அது டென்மார்க் கோல் கீப்பர் காஸ்பர் ஷ்மெய்ச்செல்லைத் தாண்டி கோலானது, இதுதான் வெற்றி கோல்.

டென்மார்க் பயங்கரமாக ஆடினர், எப்படியாவது இன்னொரு கோலை அடித்து சமன் செய்து விடலாம் என்று கடைசியில் கோல் கீப்பரே கூட கோல் போஸ்ட்டை காலியாக விடுத்து தன் கால்திறமையைக் காட்ட களமிறங்கினார். ரஷ்யாவுக்கு எதிராக இன்னும் ஒரு ஆட்டம் மீதமிருக்கையில் அந்த அணியிடம் பெல்ஜியத்திடம் காட்டிய ஆக்ரோஷத்தைக் காட்டி கோல் வித்தியாசத்தில் வென்றால் டென்மார்க்கின் நாக் அவுட் நம்பிக்கையும் தூர்ந்து போய் விடாது.

ஒவ்வொரு முயற்சியும் அபாரம், ஆனால் கடும் முயற்சியில் 2 வீரர்கள் மஞ்சள் அட்டை வாங்கினர், கடுமையான ஃபவுல் ஆட்டம் ஆடினர்.

சாதனை கோல்:

ஆட்டம் தொடங்கி 99வது விநாடியில் பெல்ஜியம் வீரர் ஜேசன் டினேயர் பந்தை வைத்துக் கொண்டு போக்குக் காட்டிக் கொண்டிருக்க கடைசியில் பந்து பியர் எமில் ஹோய்பெர்கிடம் கிடைக்க ஒரு சாமர்த்தியமான பாஸை முன்னால் மேற்கொள்ள யூசுப் போல்சன் பிரமாதமாக அதை கோலாக மாற்றினார். இது 99 விநாடியில் அதாவது கணக்கின்படி 2வது நிமிடம் அடிக்கப்பட்ட 2வது அதிவிரைவு சாதனை கோலாகும்.

ஆட்டம் தொடங்கி 99 விநாடிகளில் அடித்த சாதனை கோல், டென்மார்க். யூரோ 2020.


பெல்ஜியம் அணிக்கு எதிராக நடுவர் செயல்பட்டதும் தெரிந்தது. இடைவேளை வரை திணறிய பெல்ஜியம் அணியிடம் ஒழுங்கைப் புகுத்த இடைவேளைக்குப் பிறகு டிபுருய்ன் களமிறக்கப்பட்டார். இவர் இறங்கியவுடன் அதுவரை அமைதி காத்த லுகாகு 50 அடியிலிருந்து பாய்ச்சல் நகர்வை ஏற்படுத்த டிபுருய்ன் பந்தை பெற்று தோர்கன் ஹசார்டிடம் அடிக்க கோல் ஆனது, சமன் ஆனது.

பிறகு 70வது நிமிடத்தில் அருமையான சில பாஸ்கள், துல்லியமாக அமைய டென்மார்க் தடுப்பு வீரர்களுக்கு கடும் சோதனையை கொடுத்தது பெல்ஜியம், கடைசி பாஸை ஈடன் ஹசார்ட் மேற்கொள்ள டிபுருய்னின் சக்திவாய்ந்த இடது பாத உதை கோலுக்குள் பந்தைக் கதறச் செய்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போராடிய டென்மார்க்:

ஆனால் 2-1 என்று பின் தங்கிய நிலையிலும் டென்மார்க் விடவில்லை. பிரைத்வெய்ட் அடித்த ஷாட்டை பெல்ஜியம் கோல் கீப்பர் கூர்ட்டுவா தடுத்தார். முடியும் தறுவாயில் கோல் அடிக்கக் கிடைத்த அருமையான வாய்ப்பை பிரைத்வெய்ட் மேலே அடித்தார். ஷாட்டை கனெக்ட் செய்ய முடியாமல் டென்மார்க் வாய்ப்பை இழந்தது.

ஆட்டத்தின் புள்ளி விவரங்களைப் பார்த்தோமானால் டென்மார்க் 16 முறை கோல் முயற்சியில் ஈடுபட்டது. இவை அனைத்தும் இலக்கை தவற விட்ட வாய்ப்புகளாகும். இலக்கை நோக்கி சரியாக அடித்தது 5 முறை ஒன்றைத் தவிர மற்றவை தடுக்கப்பட்டது. பெல்ஜியம் மாறாக 2 முறைதான் இலக்குக்கு வெளியே அடித்தது. 4 முறை இலக்கை சரியாகக் குறிவைத்து 2-ஐ கோலாக்கியது.

2 கார்னர் வாய்ப்புகள் டென்மார்க்குக்குக் கிடைத்தது பெல்ஜியத்துக்கு 4 கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. டென்மார்க்கின் ஆக்ரோஷத்தை சமாளிக்க முடியாமல் 14 முறை பெல்ஜியம் ஃபவுல் செய்தது, டென்மார்க் 6 ஃபவுல்கள் செய்தது.
Published by:Muthukumar
First published: