Euro 2020 | நெதர்லாந்து அதிர்ச்சித் தோல்வி: தடுப்பு மாவீரன் செய்த ‘ஹேண்ட் பால்’ ஏற்படுத்திய சரிவு- காலிறுதியில் செக்.குடியரசு

காலிறுதிக்குள் நுழைந்த செக். குடியரசு அணி.

புடாபெஸ்ட்டில் நடைபெற்ற யூரோ கோப்பை 2020 கால்பந்து தொடரின் இறுதி -16 அணிகளுக்கு இடையேயான நாக் அவுட் சுற்றில் நேற்று சற்றும் எதிர்பாராத செக்.குடியரசு அணி 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை அதிர்ச்சித் தோல்வியுறச் செய்து காலிறுதிக்குள் நுழைந்தது.

  • Share this:
    கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி என்று கருதப்பட்ட நெதர்லாந்து அணியின் தடுப்பு மாவீரன் மத்தைஸ் டெலித் செக். குடியரசின் கோல் அடிக்கும் வாய்ப்பை தடுக்க வேண்டுமென்றே பந்தைக் கையால் பிடித்து ஹேண்ட் பால் என்ற ஒரு மிகப்பெரிய தவறை செய்து வெளியேற்றப்பட்டதால் 10 வீரர்களுக்கு குறுக்கப்பட்ட நெதர்லாந்து அதிர்ச்சித் தோல்வி கண்டது. காலிறுதியில் செக். குடியரசு வலுவான டென்மார்க் அணியைச் சந்திக்கிறது.

    செக்.குடியரசின் 2 கோல்களுமே இடைவேளைக்குப் பிறகுதான் போடப்பட்டது. 68வது நிமிடத்தில் டொமாஸ் ஹோல்ஸ் தலையால் முட்டி முதல் கோலை அடிக்க, 80வது நிமிடத்தில் பாட்ரிக் ஷிக் 2வது கோலை அடித்தார்.

    ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் நெதர்லாந்து தடுப்பு மாவீரர் என்று கருதப்படும் மத்தைஸ் டெலித் பந்தை வேண்டுமென்றே கையால் பிடித்ததால் ரெட் கார்டு காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இது நெதர்லாந்தின் வீழ்ச்சிக்குக் காரணமானது.

    “நான் செய்த காரியத்தினால் அணியே தோற்றது” என்று வருந்தினார் டெலித். “நான் பந்து பவுன்ஸ் ஆக விட்டிருக்க வேண்டும். முழுக் கட்டுப்பாட்டில் இருந்தோம் போய் விட்டது, நான் தான் பொறுப்பு” என்று வருத்தப்பட்டார் டெலித்.

    ரஷ்ய நடுவர் செர்ஜி கரசேவ் வீடியோ ரிவியூவில் உறுதி செய்து நெதர்லாந்தின் மத்தைஸ் டெலித்தை வெளியேற்ற அது பெரிய காரணியாக மாறிப்போனது.

    Also Read:  Euro 2020 Belgium vs Portugal: ரொனால்டோ கனவு தகர்ந்தது! ஐரோப்பிய சாம்பியன் போர்ச்சுகல் வெளியேற்றம்- காலிறுதியில் பெல்ஜியம்

    2014 உலகக்கோப்பையில் பங்கேற்ற பிறகு பெரிய கால்பந்து தொடருக்குத் தகுதி பெற்ற நெதர்லாந்து நாக் அவுட் சுற்றில் பரிதாபமாக வெளியேறியது.

    ஆட்டத்தில் முதல் வாய்ப்பு செக். குடியரசுக்குத்தான் கிடைத்தது, 23வது நிமிடத்தில் அதன் டொமாஸ் சூசெக் டைவ் அடித்து தலையால் முட்டிய பந்து வெளியே சென்றது. 34வது நிமிடத்தில் இதைவிடவும் நல்ல கோல் வாய்ப்பு மீண்டும் செக். அணிக்குக் கிடைத்தது. ஆனால் மத்தைஸ் டெலித் திகைப்பூட்டும் ஒரு தடுப்பைச் செய்தார். லூகாஸ் மசோபஸ்ட் அருகிலிருந்து அடித்த கோல் ஷாட்டை டெலித் அபாரமாகத் தடுத்தார்.

    இடைவேளைக்கு முன்னதாக நெதர்லாந்து ஏறக்குறைய கோல் அடித்திருக்கும், மெம்பிஸ் டீப்பே அடித்த ஷாட் பாட்ரிக் வான் ஆன் ஹோல்ட்டிடம் வர அவர் இலக்கை தவற விட்டார்.

    இடைவேளைக்கு பிறகு மீண்டும் நெதர்லாந்துக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, இம்முறை டோன்யெல் மலேனின் முயற்சியை செக். கோல் கீப்பர் வாக்லிக் முறியடித்தார். அதன் பிறகுதான் செக். குடியரசின் கோல் முயற்சியைத் தடுக்கும் நோக்கத்துடன் மத்தைஸ் டெலித் பந்தை கையால் பிடிக்க ரெட் கார்டு காட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் நடந்தது. 2004க்குப் பிறகு நெதர்லாந்து வீரர் ஒருவர் ரெட் கார்டு காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    10 வீரர்களுக்குக் குறுக்கப்பட்ட நெதர்லாந்தின் தடுப்பு மாவீரர் டெலித் இல்லாததால் 68வது நிமிடத்தில் கார்னர் வாய்ப்பு பெற்றது செக். அணி, அந்த கார்னர் ஷாட்டை டொமாஸ் கலாஸ் தலையால் முட்டி ஹோல்ஸுக்கு அனுப்ப அவர் தலையால் முட்டி முதல் கோலை அடித்தார்.

    ஆட்டம் முடிய 10 நிமிடங்கள் இருக்கும் போது ஹோல்ஸ் பந்தை ஷிக்கிடம் அனுப்ப அவர் 2வது கோலை அடித்தார், பாட்ரிக் ஷிக்கின் யூரோ 2020-யின் 4வது கோலாகும் அது, அன்று நடுமைதானத்திலிருந்து ஷிக் அடித்த கோலையும் பிறகு மூக்கில் ரத்தம் வர அடித்த கோலையும் இந்த கோலையும் மறக்க முடியாது.

    காலிறுதியில் செக்.குடியரசு அணி டென்மார்க் அணியை வரும் சனிக்கிழமை பாக்கூவில் சந்திக்கிறது.
    Published by:Muthukumar
    First published: