Euro 2020 Christian Eriksen: கிறிஸ்டியன் எரிக்சனுக்கு ஏற்பட்டது மாரடைப்பு, 5 நிமிடங்கள் இருதயம் நின்றது: இனி கால்பந்து ஆடுவது கடினம் என்கிறார் மருத்துவர்

பந்தை எடுத்துச் செல்லும் கிறிஸ்டியன் எரிக்சன்.

பின்லாந்துக்கு எதிரான ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென பேச்சு மூச்சின்றி கீழே விழுந்தார், அப்போது அவரது இருதயம் 5 நிமிடங்கள் வரை இயங்கவில்லை, அவருக்கு ஏற்பட்டது மாரடைப்பு

  • Share this:
    பின்லாந்துக்கு எதிரான ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென பேச்சு மூச்சின்றி கீழே விழுந்தார், அப்போது அவரது இருதயம் 5 நிமிடங்கள் வரை இயங்கவில்லை, அவருக்கு ஏற்பட்டது மாரடைப்பு என்று கூறும் முன்னணி இருதய நோய் நிபுணர் இனி அவர் இத்தாலியில் கிளப் கால்பந்து ஆட முடியாது அவர் தடைசெய்யப்படுவார் என்று கூறுகிறார்.

    இத்தாலி கால்பந்து லீக் சீரீ ஏ-வில் இண்டெர்மிலன் அணிக்கு ஆடும் வீரர் டென்மார்க்கின் கிறிஸ்டியன் எரிக்சன். இத்தாலி சட்டத்தின் படி மாரடைப்பு ஏற்பட்டவர்கள் இருதய நோய் உள்ளவர்கள் இத்தாலியில் ஆட முடியாது என்று முன்னணி இருதய நோய் நிபுணர் டாக்டர் ஸ்காட் முர்ரே தெரிவித்துள்ளார்.

    எரிக்சன் தற்போது உயிர் பிழைத்து கோபன் ஹேகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அணி வீரர்களுக்கு உற்சாக செய்தியும் அனுப்பியுள்ளார்.

    Also Read: Euro 2020 Christian Eriksen: மயங்கி விழுந்த கிறிஸ்டியன் எரிக்சனைக் காப்பாற்றியது எப்படி?- டென்மார்க் டீம் டாக்டர் விளக்கம்

    எரிக்சன் மைதானத்தில் மயங்கி விழுந்த போது 5 நிமிடங்கள் அவரது இருதயம் வேலை செய்யவில்லை. உடனடியாக சுவாச மீட்புச் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் எப்படியோ அவரது சுவாசம் மீண்டு நனவும் திரும்பியது. இது மாரடைப்பு தான் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

    இந்நிலையில் டாக்டர் ஸ்காட் முர்ரே கூறியதாவது:

    இது கிறிஸ்டியன் எரிக்சனின் கால்பந்து வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும். இருதய நோய் இருப்பவர்கள் இத்தாலியில் ஆட முடியாது, ஏனெனில் அந்த நாட்டின் சட்டம் அப்படி.

    கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இத்தாலியில் இப்படித்தான். கால்பந்து என்று அல்ல எந்த ஒரு விளையாட்டிலும் திடீர் மாரடைப்பு இறப்புகளைத் தடுக்க அவர்கள் இந்த மாதிரி சட்டம் கொண்டு வந்துள்ளனர், என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த ஆட்டத்தில் எரிக்சன் மயங்கி விழுந்து மூச்சுப் பேச்சின்றி கிடந்ததைப் பார்த்தவுடன் அவர் மனைவி கண்கலங்கினார்.

    எப்படியோ எரிக்சன் உயிர் பிழைத்தது யூரோ 2020-க்கே புத்துயிர் அளித்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. பெல்ஜியம் நட்சத்திரம் லுகாகு தன் 2 கோல்களையும் எரிக்சனுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தது பலரையும் நெகிழ வைத்துள்ளது.

    ஆனால் டென்மார்க் அணி பின்லாந்திடம் 1-0 என்று தோற்றது எரிக்சனுக்கு வலியை அதிகரித்திருக்கும். ஆனாலும் அவர் அணி வீரர்களுக்கு உற்சாகச் செய்தி அனுப்பினார்.
    Published by:Muthukumar
    First published: