Euro 2020 Christian Eriksen: மயங்கி விழுந்து பேச்சு மூச்சின்றிப் போன டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் : சிகிச்சையில் உயிர் பிழைத்தார்

ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்ட கிறிஸ்டியன் எரிக்சன் உயிர் பிழைத்தார்.

டென்மார்க் நட்சத்திர கிறிஸ்டியன் எரிக்சன் பாதி ஆட்டத்தில் களத்தில் மயக்கமடைந்து சுருண்டு விழுந்தார். அவரை உடனே ஸ்ட்ரெச்சரில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

  • Share this:
    யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற டென்மார்க்-பின்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஒரு துயர சம்பவம் நடந்தது. டென்மார்க் நட்சத்திர கிறிஸ்டியன் எரிக்சன் பாதி ஆட்டத்தில் களத்தில் மயக்கமடைந்து சுருண்டு விழுந்தார். அவரை உடனே ஸ்ட்ரெச்சரில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

    இதனையடுத்து டென்மார்க்- பின்லாந்து போட்டி இடைநிறுத்தப்பட்டது. இடைவேளைக்கு முன்னர் 42வது நிமிடத்தில் அப்போதுதான் ஒரு ஷார்ட் பாஸ் செய்த கிறிஸ்டியன் எரிக்சன் அப்படியே முகம் தரையில்பட சுருண்டு விழுந்தார். உடனேயே சக வீரர்கள் அவருக்கு உதவினர், மருத்துவக் குழு உடனே களம் புகுந்தனர். செஸ்ட் கம்ப்ரஷன் முதலுதவி அவருக்கு அளிக்கப்பட்டது.

    ஒரு 10 நிமிடம் அவருக்கு முதலுதவி சிகிச்சை நடந்தது பிறகு ஸ்ட்ரெச்சரில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சிறிது நேரத்தில் யு.இ.எஃப்.ஏ. ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தது.

    மருத்துவமனையில் அவரது நாடித்துடிப்பு, இருதயத் துடிப்பு மீட்கப்பட்டு அவர் தற்போது மூச்சு விடுவதாகவும் பேசுவதாகவும் எரிக்சனின் முகவர் என்பிஓ ரேடியோவுக்குக் கூறினார்.

    அவர் உயிர் பிழைத்தார் என்ற செய்தி அணி வீரர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    எரிக்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை, எந்த ஒரு மருத்துவ சோதனையிலும் அனாயசமாக தேறுபவர் எரிக்சன் என்று அணி மேலாளர் கூறுகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எரிக்சன் உடல் நிலை மீட்கப்பட்டது, அவர் கண் விழித்தார் என்ற செய்தி ஸ்டேடியத்தில் அறிவிக்கப்பட்டவுடன் பின்லாந்து, டென்மார்க் ரசிகர்கள் மகிழ்ச்சியில் சப்தம் எழுப்பினர்.

    கால்பந்து மைதானத்தில் வீரர்கள் சுருண்டு விழுவது இது முதல்முறையல்ல. 2012-ல் பாப்ரிஸ் மும்பா சுருண்டு விழுந்து சிபிஆர் தேவைப்பட்டது.
    Published by:Muthukumar
    First published: