Euro 2020 | என்டு கார்டு போட்டு கிண்டலா பண்றீங்க? எனக்கு ’என்டே’ கிடையாது- தலைநகரம் வடிவேலு பாணியில் வேல்ஸ் கேப்டன்

வேல்ஸ் கேப்டன் காரெத் பேல்.

யூரோ கோப்பைக் கால்பந்து தொடர் நாக்-அவுட் சுற்றில் டென்மார்க் அணியிடம் 4-0 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்து வெளியேறியது வேல்ஸ் அணி, இதனையடுத்து அந்த அணியின் கேப்டன் ஓய்வு பெறப்போகிறார், இதுதான் வேல்ஸுக்கு அவர் ஆடிய கடைசி போட்டி என்ற செய்திகள் ஊடகங்களில் வெளிவர அவர் கடுப்பானார்.

  • Share this:
    சனிக்கிழமையன்று தோற்று முடித்த கையோடு வெல்ஷ் டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், தலைநகரம் வடிவேலு பாணியில், ‘எனக்கா எண்ட் கார்டு போட்டு நக்கல் பண்றீங்க, எனக்கு எண்டே கிடையாது, அடுத்து உலகக்கோப்பை’ என்று வடிவேலு ‘அடுத்து நயன்தாரா’ என்பாரே அது போன்று கூறியுள்ளார்.

    யூரோ 2016 கால்பந்து தொடரில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளித்த வேல்ஸ் அணியின் கேப்டன் இந்த அணியை பிரமாதமாகக் கொண்டு வந்தார். யூரோ 2020-லும் பிரமாதமாக ஆடி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறினர். சுவிஸ் அணிக்கு எதிராக உடைந்த தடுப்பு வியூகம் டென்மார்க் அணிக்கு எதிராக முற்றிலும் உடைந்தது. வேல்ஸ் அணியின் ஜோ ரோடான் இந்தத் தொடர் முழுதும் தன் தடுப்புப் பணியை செவ்வனே செய்தார், ஆனால் அன்று டென்மார்க்கிடம் சோடை போனார். 2வது கோலை டென்மார்க் அடிக்கக் காரணமாக இருந்த பிராத்வெய்ட்டை ரோடனால் தடுக்க முடியவில்லை.

    இந்தத் தோல்வியிலிருந்து வேல்ஸ் அணியின் கால்பந்து என்னவாகும், கேப்டன் காரெத் பேல் என்ன செய்யப் போகிறார் என்றெல்லாம் ஊடகங்கள் பேசவும் எழுதவும் தொடங்கின.

    இதையும் படிச்சுப் பாருங்க: Euro 2020 Belgium vs Portugal: ரொனால்டோ கனவு தகர்ந்தது! ஐரோப்பிய சாம்பியன் போர்ச்சுகல் வெளியேற்றம்- காலிறுதியில் பெல்ஜியம்

    இந்நிலையில் வேல்ஸ் கேப்டன் கூறியதாவது:

    நான் தொடர்ந்து கால்பந்து ஆடுவேன். மக்கள் எப்போதும் முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்கின்றனர். நான் வேல்ஸ் அணிக்கு ஆடுவதை விரும்புகிறேன் என்பதை எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கவும் வேண்டுமோ?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நான் கால்பந்து ஆடுவதை நிறுத்தும் வரை நாட்டுக்காக ஆடுவேன். நான் ஓய்வு பெறும் எண்ணமெல்லாம் இல்லை. அடுத்த குறி உலகக்கோப்பைத் தகுதிதான்.

    உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளில் இந்த அனுபவத்தைக் கொண்டு செல்வோம், நாங்கள் நன்றாக ஆடும்போது நல்ல வழிகளைப் பின்பற்றுகிறோம். அந்த நம்பிக்கையை இன்னும் உச்சத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். தொடர்ந்து ஆடிக்கொண்டே இருக்க வேண்டும். அடுத்த உலகக்கோப்பைக்குத் தகுதி பெறுவொம்.

    என்றார் காரெத் பேல்.

    உலகக்கோப்பைத் தகுதிச் சுற்றுக் கால்பந்தில் செக்.குடியரசுடன் மோத வேண்டியுள்ளது. பெல்ஜியத்துக்கு அடுத்து 2ம் இடம் பிடிக்க வேண்டும். எனவே வேல்ஸ் அணி இதைத்தான் இலக்காகக் கொண்டுள்ளது.
    Published by:Muthukumar
    First published: