Euro 2020 | யூரோ கோப்பை: உக்ரைனை வீழ்த்தி ஆஸ்திரியா நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி- காத்திருக்க வேண்டிய நிலையில் உக்ரைன்

நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் ஆஸ்திரியா.

நெதர்லாந்துக்கு அன்று கடினமான சவால் அளித்த உக்ரைன் அணி நேற்று ஆஸ்திரியா அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது, இதன் மூலம் ஆஸ்திரியா அணி 2 வெற்றிகள் 6 புள்ளிகளுடன் 16 அணிகள் கொண்ட லாஸ்ட்-16 நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

  • Share this:
    நெதர்லாந்துக்கு அன்று கடினமான சவால் அளித்த உக்ரைன் அணி நேற்று ஆஸ்திரியா அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது, இதன் மூலம் ஆஸ்திரியா அணி 2 வெற்றிகள் 6 புள்ளிகளுடன் 16 அணிகள் கொண்ட லாஸ்ட்-16 நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

    உக்ரைன் அணி இதனால் 3ம் இடம் பெற்றுள்ளது, 3ம் இடம்பெற்ற 4 சிறந்த அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் அந்தப் பட்டியலில் இடம்பெறுவோமா என்று உக்ரைன் தற்போது காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று 3 புள்ளிகளைப் பெற்று 3ம் இடத்தில் உள்ளது.

    21வது நிமிடத்தில் ஆஸ்திரியாவின் கிறிஸ்டோபர் பாம்கார்ட்னர் அடித்த கோல்தான் பிற்பாடு வெற்றிக்கான ஒரே கோலாக அமைந்தது. நெதர்லாந்துக்கு எதிராக 2-3 என்று கடும் நெருக்கடி கொடுத்த உக்ரைன், அதன் பிறகு கடுமையாக ஆடிய நார்த் மேசிடோனியாவை வீழ்த்தி இறுதி 16 கனவை வளர்த்தது. ஆனால் நேற்று உக்ரைனின் ஆட்டத்தில் எந்த ஒரு உத்வேகமும் இல்லாதது ஆச்சரியமளித்தது.

    Also Read: Euro 2020 | யூரோ 2020- எரிக்சன் துயரத்திலிருந்து மீண்ட டென்மார்க்: ரஷ்யாவை 4-1 என்று வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது

    பந்தை தங்கள் வசம் வைத்திருப்பதிலும் உக்ரைன் சோடைபோனது. உக்ரைன் சுருங்கிப் போகப் போக மறுமுனையில் ஆஸ்திரியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நெதர்லாந்துக்கு எதிராக மறக்கப்பட வேண்டிய விதத்தில் ஆடிய ஆஸ்திரியா எழுச்சி பெற்றது, ஆனால் நெதர்லாந்துக்கு எதிராக கடும் சவால் அளித்து ட்ரா செய்யும் அச்சுறுத்தலை வழங்கிய உக்ரைன் நேற்று வீழ்ந்து விட்டது. இதுதான் விளையாட்டின் நகைமுரண்.

    21வது நிமிடத்துக்கு முன்னால் ஆஸ்திரியா கோல் வாய்ப்புகளைப் பெரிதாக உருவாக்கவில்லை. ஏற்கெனவே டேவிட் ஆல்பா உக்ரைனுக்கு அதிக தொல்லைகள் கொடுத்ததினால் ஆஸ்திரியா சார்பாக 4 கார்னர் கிக் வாய்ப்புகள் சென்றன, இப்போது 5வது வாய்ப்பு உருவானது. அருமையாக வளைந்து வந்த பந்தை கோலுக்கு அடிக்க வேண்டியதுதான், கிறிஸ்டோபர் பாம்கார்ட்னர் ஏற்றுக் கொண்டர், ஆஸ்திரியாவின் ஒரே கோல் வந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதன் பிறகு இடைவேளைக்கு முன்னர் ஆஸ்திரியா 2வது கோல் வாய்ப்பைப் பெற்றது. ஆஸ்திரியாவின் மார்கோ அர்னாவ்டோவிச் கோல் வாய்ப்பை வைடாக அடித்து தவற விட்டார், இவருக்கு அலிசாண்ட்ரோ ஸ்காஃப் ஷாட் அடித்த போது அர்னாவ்டோவிச் அருகே யாரும் இல்லை. இடது காலால் அடித்த ஷாட் வைடாகிப் போனது.

    உக்ரைன் ஆட்டம் மேன்மேலும் சொதப்பலாக உத்வேகம் இல்லாமல் போக ஆஸ்திரியா வாய்ப்புகள் ஒன்றிரண்டை தவற விட்டது, ஆனால் ஒரு கணத்தில் ஆஸ்திரியா பெரிய தவறைச் செய்யவிருந்தது. அந்த அணியின் ஸ்டெபான் லெய்னர் தலையால் முட்டி தன் கோலுக்குள்ளேயே அடித்து சேம்சைடு கோலாக்கி உக்ரைனுக்கு வாய்ப்பளித்திருப்பார், ஆனால் ஆஸ்திரியா கோல் கீப்பர் டேனியல் பாக்மான் அதை தடுக்கும் அளவுக்குக் கூர்மையானவராக இருந்ததால் பிழைத்தது ஆஸ்திரியா.
    Published by:Muthukumar
    First published: