ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலககோப்பை கால்பந்து : கத்தார்- ஈக்வடாரின் போட்டியில் சர்ச்சையைக் கிளப்பிய முதல் கோல்!

உலககோப்பை கால்பந்து : கத்தார்- ஈக்வடாரின் போட்டியில் சர்ச்சையைக் கிளப்பிய முதல் கோல்!

ஈக்வடார் கோல்

ஈக்வடார் கோல்

ஈக்வடார் வீரர் மைக்கேல் எஸ்ட்ராடா ஆப் சைடாக இருந்தது தெரியவந்தது. அதுவும் அவரது வலது காலின் பாதம் மட்டுமே ஆப் சைடாக இருந்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaQatarQatarQatar

  உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அடிக்கப்பட்ட முதல் கோலே, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் ஆப் சைடு கோல் என அறிவிக்கப்பட்டது.

  கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பை தொடரின் முதலாவது ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தாரும், ஈக்வடாரும் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே ஈக்வடார் கேப்டன் வலேன்சியா கோல் அடிக்க, ஈக்வடார் ரசிகர்கள் துள்ளி குதித்தனர். எனினும், அந்த கோலை வீடியோவில் ஆய்வு செய்த நடுவர், கோல் இல்லை என அறிவித்தார்.

  இதையும் படிக்க : 50 ஓவரில் 506 ரன்கள் குவித்த தமிழக அணி.. ஒரே போட்டியில் 9 சாதனைகளை முறியடித்த ஜெகதீசன்

  நடப்பு உலகக் கோப்பையில், ஆப் சைடு கோல்களை கண்காணிப்பதற்காக, புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பந்தை அடிப்பதற்கு முன்னதாகவே, ஈக்வடார் வீரர் மைக்கேல் எஸ்ட்ராடா ஆப் சைடாக இருந்தது தெரியவந்தது. அதுவும் அவரது வலது காலின் பாதம் மட்டுமே ஆப் சைடாக இருந்தது. இதனால் ஈக்வடார் அணிக்கு அந்த கோலை நடுவர்கள் வழங்கவில்லை.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: FIFA, FIFA World Cup, FIFA World Cup 2022, Football, Qatar