ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி 20 உலககோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி.. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா தொடரை விட்டு வெளியேறியது..

டி 20 உலககோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி.. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா தொடரை விட்டு வெளியேறியது..

ENGvSl

ENGvSl

இங்கிலாந்து அணி தோற்றால் ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறும். இதனால் இன்றைய ஆட்டம் மிக முக்கியமானதாகவே பார்க்கப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaAustraliaAustraliaAustralia

  ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் டி20 உலககோப்பை தொடரில், இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

  நடந்து வரும் சூப்பர்12 சுற்றில் இன்று இலங்கை அணியும் இங்கிலாந்து அணியும் மோதின. முதலாவது க்ரூப்பில் ஏற்கனவே நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்காக இங்கிலாந்து அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் கடும் போட்டி நிலவியது.

  இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. இங்கிலாந்து அணி தோற்றால் ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறும். இதனால் இன்றைய ஆட்டம் மிக முக்கியமானதாகவே பார்க்கப்பட்டது.

  இதையும் படிக்க : ஒரு ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி

  முதலில் டாஸ் வென்று பேட் செய்த இலங்கை, 8 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிசன்கா 45 பந்துகளில் 67 ரன்களை எடுத்தார்.

  க்ரூப் 1 புள்ளி பட்டியல்

  142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. அதிகபட்சமாக அலெக்ஸ் ஹேல்ஸ் 30 பந்துகளில் 47 ரன்களை எடுத்தார். பென் ஸ்ரோக்ஸ் 36 பந்துகளில் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா உலககோப்பை தொடரை விட்டு வெளியேறியது.

  நாளை நடக்கும் போட்டியில் இந்தியா ஜிம்பாவே அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் தான் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Australia, England, T20 World Cup