ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஈரானை வீழ்த்தியது இங்கிலாந்து!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஈரானை வீழ்த்தியது இங்கிலாந்து!

வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி

வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி

சக வீரருடன் மோதியதில் ஈரான் கோல் கீப்பர் மஜீத் ஹூசைனுக்கு முகத்தில் பலத்த காயமடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார். இதனால் சுமார் 7 நிமிடங்களுக்கு மேல் ஆட்டம் தடைப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • internati, IndiaQatarQatar

    உலகக் கோப்பை கால்பந்து தொடரில், இன்று ஈரானுக்கு எதிரான போட்டியில் 6-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

    கத்தாரில் உள்ள கலிஃபா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து மற்றும் ஈரான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்திய நிலையில் ஈரான் கோல்கம்பத்தை பந்து சுற்றி வந்தது. சக வீரருடன் மோதியதில் ஈரான் கோல் கீப்பர் மஜீத் ஹூசைனுக்கு முகத்தில் பலத்த காயமடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.

    Also Read : கத்தார் உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ பாடல் என்ன?

    இதனால் சுமார் 7 நிமிடங்களுக்கு மேல் ஆட்டம் தடைப்பட்டது. ஆட்டத்தின் 35 நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஜூடு முதல் கோல் அடித்து தனது அணியின் எண்ணிக்கையை தொடக்கிவைத்தார். இதையடுத்து இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து கோல் மழை பொழிந்தனர். பதிலுக்கு ஈரானால் இரு கோல்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இறுதியில் இங்கிலாந்து 6க்கு2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    Published by:Raj Kumar
    First published:

    Tags: England, FIFA, FIFA World Cup 2022, Football, Qatar