அமெரிக்க ஓபன் டென்னிஸில் பட்டம் வென்று வரலாறு படைத்தார் 18 வயதான எம்மா ரடுகானு!

Emma Raducanu

தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடிய ஒரு வீராங்கனை அமெரிக்க ஓபன் கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

  • Share this:
அமெரிக்க ஓபன் டென்னிஸில் பட்டம் வென்றார் 18 வயதான எம்மா ரடுகானு. கனடா வீராங்கனை லேலா அன்னியை வீழ்த்தி அபாரம்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில், பிரிட்டன் வீராங்கனை எம்மா ரடுகானு கோப்பையை வசப்படுத்தினார். உலக தரவரிசையில் 150 வது இடத்தில் இருக்கும் 18 வயது ஆன ரடுகானு, கனடாவை சேர்ந்த உலக தரவரிசையில் 73வது இடத்தில் இருக்கும் 19 வயது வீராங்கனை லேலா பெர்னான்டசை எதிர்கொண்டார்.

தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிரிட்டன் வீராங்கனை ரடுகானு வெற்றி பெற்றார். இதன் மூலம் 44 ஆண்டுகளுக்கு பின் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பிரிட்டன் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். அவருக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகை அளிக்கப்பட்டது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரடுகானுவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Also Read: 769 நாள் லீவு போட்டுவிட்டு ஒரே நேரத்தில் இரட்டை சம்பளம் வாங்கிய கில்லாடி கணக்கு வாத்தியார் – ஏமாற்றியது எப்படி?

முன்னதாக 1977ம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த விர்ஜினியா வேட் என்ற வீராங்கனை விம்பிள்டனில் மகளிர் ஒற்றையரில் வாகை சூடியிருந்தார். அவருக்கு பிறகு தற்போது எம்மா ரடுகானு வாகை சூடியிருக்கிறார்.அமெரிக்க ஓபன் கோப்பையை வென்ற ரடுகானுவை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் பாராட்டியுள்ளார். இவ்வளவு சிறிய வயதில் குறிப்பிடத்தக்க சாதனையை படைத்துள்ளீர்கள், இது உங்களின் கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் கிடைத்த வெற்றி என ராணி எலிசபெத் பாராட்டியிருக்கிறார்.

Also Read:   11 ஆண்டுகளாக சம்பளம் பெற்று வரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் – ஆர்.டி.ஐ தகவலில் அம்பலம்!

தரவரிசையில் மிகவும் பின் தங்கிய வீராங்கனைகள் முதல் முறையாக இறுதிப் போட்டியில் மோதிய போட்டி இதுவாகத்தான் இருந்தது. மேலும் தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடிய ஒரு வீராங்கனை அமெரிக்க ஓபன் கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: