அர்ஜூனா விருதிற்கு தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் பெயர் பரிந்துரை!

உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியில் 10 மீ. ஏர் ரைஃபில் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை நிகழ்த்தியவர் இவர்.

அர்ஜூனா விருதிற்கு தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் பெயர் பரிந்துரை!
துப்பாக்கிச்சுடு வீராங்கனை இளவேனில் வாலறிவன்.
  • Share this:
தமிழகத்தைச் சேர்ந்த துப்பாக்கிச்சுடு வீராங்கனை இளவேனில் வாலறிவனின் பெயரை அர்ஜூனா விருதிற்கு தேசிய துப்பாக்கிச்சுடு சங்கம் பரிந்துரை செய்துள்ளது.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த வருடத்திற்கான அர்ஜூனா விருது பெயர் பட்டியலை விளையாட்டுச் சங்கங்கள் ஜூன் 3ம் தேதிக்குள் விளையாட்டு அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்ய வேண்டும். அந்த அடிப்படையில் தேசிய துப்பாக்கிச்சுடும் சங்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் பெயரைப் பரிந்துரை செய்துள்ளது.

இளவேனில் வாலறிவன் ரியோடி ஜெனிரோ நகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியில் 10 மீ. ஏர் ரைஃபில் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை நிகழ்த்தினார்.


அத்துடன் ஏற்கனவே ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கம் வென்றவர் இளவேனில் என்பது கூடுதல் சிறப்பாகும். இதை கௌரவிக்கும் விதமாக இவரது பெயர் அர்ஜூனா விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


Also see:
First published: May 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading