Home /News /sports /

பதக்கம் வெல்லும் இந்திய வீரர்களை பிரதமர் மோடி பாராட்டுகிறார், பாகிஸ்தானில் அப்படிப்பட்ட தலைவர்கள் இல்லை - பாகிஸ்தான் பத்திரிகையாளர் புகழாரம்

பதக்கம் வெல்லும் இந்திய வீரர்களை பிரதமர் மோடி பாராட்டுகிறார், பாகிஸ்தானில் அப்படிப்பட்ட தலைவர்கள் இல்லை - பாகிஸ்தான் பத்திரிகையாளர் புகழாரம்

பிரமதர் மோடி - பூஜா கெலாட்

பிரமதர் மோடி - பூஜா கெலாட்

காமன்வெல்த் 2022 போட்டிகளில் மல்யுத்தத்தில் தங்கம் வெல்ல முடியவில்லையே வெண்கலப்பதக்கத்துடன் முடிந்து விட்டோமே என்று பூஜா கெலாட் என்றவ் வீராங்கனை கண்ணீர் மல்கக் கூறியதைக் கண்ட பிரதமர் நரேந்திர மோடி அவரைத் தேற்றுமாறும் பாராட்டுமாறும் ஒரு பதிவை வெளியிட அது பலரது இதயங்களை வென்றுள்ளது பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவரும் இந்தியப் பிரதமர் மோடியின் செய்கையை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    காமன்வெல்த் 2022 போட்டிகளில் மல்யுத்தத்தில் தங்கம் வெல்ல முடியவில்லையே வெண்கலப்பதக்கத்துடன் முடிந்து விட்டோமே என்று பூஜா கெலாட் என்றவ் வீராங்கனை கண்ணீர் மல்கக் கூறியதைக் கண்ட பிரதமர் நரேந்திர மோடி அவரைத் தேற்றுமாறும் பாராட்டுமாறும் ஒரு பதிவை வெளியிட அது பலரது இதயங்களை வென்றுள்ளது பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவரும் இந்தியப் பிரதமர் மோடியின் செய்கையை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

    பூஜா கெலாட் மல்யுத்த ஃப்ரீஸ்டைலில் 50 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டார். அரையிறுதி ஸ்டேஜைக் கடக்கவில்லையே இதனால் என் தேசத்துக்கு நான் தலைகுனிவை ஏற்படுத்தி விட்டேன் என்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் மனம் உடைந்து கண்ணீர் மல்க பேட்டியளித்தார். மேலும் தங்கம் வெல்லாததர்காக மன்னிப்பு கேட்டார்.

    இந்த வீடியோவை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட இதற்கு எதிர்வினையாற்றிய பிரதமர் மோடி, “பூஜா உங்களது பதக்கம் கொண்டாட்டங்களையே எதிர்நோக்குகிறது மன்னிப்பை அல்ல. உங்கள் வாழ்க்கைப் பயணம் எங்களுக்கு தூண்டுகோலாக உள்ளது. உங்கள் வெற்றி எங்களை மகிழ்விக்கிறது. இன்னும் பல சாதனைகளை செய்யவிருக்கிறீர்கள். எனவே தொடர்ந்து ஒளிருங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

    இதனைப் பார்த்து நெகிழ்ந்து போனவர்களில் இந்தியர்கள் மட்டுமல்ல பாகிஸ்தானியர்களும் அடங்குவர், அந்த நாட்டுப் பத்திரிகையாளர் ஷிராஜ் ஹுசைன் கூறுகையில், “இப்படித்தான் இந்தியா தன் தடகள வீரர்களைக் கொண்டாடுகிறது, புஜா கெலாட் வெண்கலம் வென்றுள்ளார். அவர் தன்னால் தங்கம் வெல்ல முடியவில்லை என்று உடைந்து நொறுங்கிய போது பிரதமர் மோடி அவரைத் தேற்றுமாறும் பாராட்டுமாறும் பதிவிடுகிறார்.

    பாகிஸ்தானில் இது போன்று வீரர்களைப் பாராட்டும் பிரதமர்களையோ, அதிபர்களையோ நான் கண்டதில்லை. பாகிஸ்தான் வீரர்கள் பதக்கம் வெல்கிறார்கள் என்பது கூட இவர்களுக்கு தெரியுமா தெரியாதா என்று தெரியவில்லை.” என்று பிரதமர் மோடியின் சிறப்பான குணத்தைப் பாராட்டி எழுதியுள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Commonwealth Games, PM Modi

    அடுத்த செய்தி