ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

FIFA World Cup 2022: இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ் அணி!

FIFA World Cup 2022: இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ் அணி!

அரையிறுதிக்குள் நுழைந்த பிரான்ஸ் அணி

அரையிறுதிக்குள் நுழைந்த பிரான்ஸ் அணி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • intern, IndiaDohaDoha

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. பரபரப்பாகத் தொடங்கிய போட்டியின் முதல் பாதியில் பிரான்ஸ் வீரர் சவுமெனி ஆட்டத்தின் 17ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து அசத்தினார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என பிரான்ஸ் அணி முன்னிலை வகித்தது.

இதனைத் தொடர்ந்து போட்டியின் இரண்டாவது பாதியின் 54ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஹேரிகேன் பதில் கோல் அடித்து போட்டியைச் சமன் செய்தார். இதனால் ஆட்டத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றியது. பின்னர் 78வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் ஒலிவியர் கிரவுடு அடித்த அசத்தலான கோலால் பிரான்ஸ் மீண்டும் முன்னிலை பெற்றது.

அதன் பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. கூடுதல் நேரத்திலும் கோல் அடிக்கப்படாததால் இறுதியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

இதையும் படிங்க: FIFA World Cup 2022 : இது ஆப்பிரிக்காவின் காலம்... உலகக்கோப்பை அரையிறுதிக்குள் நுழைந்து அசத்திய மொராக்கோ!

முன்னதாக நேற்று நடைபெற்ற மற்றொரு காலிறுதிப் போட்டியில் மொராக்கோ அணி போர்ச்சுகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்தது. இதன் மூலம் உலகக் கோப்பை அரையிறுதியில் நுழையும் முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை மொராக்கோ பெற்றுள்ளது. எனவே, டிசம்பர் 15ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் அணி மொராக்கோ அணியை எதிர்கொள்கிறது.

First published:

Tags: FIFA 2022, FIFA World Cup, FIFA World Cup 2022