Deepak Kabra: ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு நடுவராக முதன்முறையாக இந்தியர் தேர்வு!

தீபக் காப்ரா

இந்தியாவைச் சேர்ந்த  ஜிம்னாஸ்டிக் போட்டி நடுவரான தீபக் காப்ரா, ஒலிம்பிக் விளையாட்டின் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியின் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒலிம்பிக் விளையாட்டின் ஜிம்னாஸ்டிக் போட்டியில் நடுவராக பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற சிறப்பை தீபக் காப்ரா பெற்றுள்ளார்

  • Share this:
டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு தொடரின் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு இந்தியரான தீபக் காப்ரா நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2020ம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில்கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்தது. எனினும் கொரோனா பரவல் காரணமாக போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, டோக்கியோ நகரில் வரும் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. ஆகஸ்ட் 8ம் தேதிவரை ஒலிம்பிக் போட்டிகள்  நடைபெறவுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த போட்டியில் இந்தியா சார்பில் 120 பேர் பங்கேற்கின்றனர். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஜூலை 14ம் தேதி (நாளை) டோக்கியோ புறப்பட்டு செல்கிறது.  இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த  ஜிம்னாஸ்டிக் போட்டி நடுவரான தீபக் காப்ரா, ஒலிம்பிக் விளையாட்டின் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியின் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒலிம்பிக் விளையாட்டின் ஜிம்னாஸ்டிக் போட்டியில் நடுவராக பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற சிறப்பை தீபக் காப்ரா பெற்றுள்ளார்.





பிரேசிலின் ரியோவில் கடந்த முறை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் வெங்கலம் வென்ற தீபா கர்மாக்கர், இந்த தகவலை ட்விட்டரில்தெரிவித்து தீபக் காப்ராவுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

தீபக்கைப் போலவே, இந்திய தேசிய துப்பாக்கி சங்கத்தின் (என்.ஆர்.ஏ.ஐ) இணை பொதுச் செயலாளர் பவன் சிங், ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கான  முதல் இந்திய நடுவராக தேர்வு செய்யப்பட்டார்.
Published by:Murugesh M
First published: