ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டென்னிஸில் இப்படி ஒரு ஷாக்கா? 19 வயது வீரரிடம் வீழ்ந்த ஜோகோவிச்.. அதிர்ச்சி மேட்ச்!

டென்னிஸில் இப்படி ஒரு ஷாக்கா? 19 வயது வீரரிடம் வீழ்ந்த ஜோகோவிச்.. அதிர்ச்சி மேட்ச்!

பாரிஸ் மாஸ்டர்ஸ் பட்டம் வென்ற இளம் வீரர் ஹோல்கர் ரூனே

பாரிஸ் மாஸ்டர்ஸ் பட்டம் வென்ற இளம் வீரர் ஹோல்கர் ரூனே

இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் முதல் முறையாக டாப்-10 பட்டியலில் முன்னேறியுள்ளார் ரூனே.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inte, IndiaParisParis

  உலகின் முன்னணி டென்னிஸ் வீரரும் 21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான நோவாக் ஜோகோவிச் 19 வயது இளம் வீரரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். பாரீஸ் மாஸ்டர்ஸ் 1000 ஏடிபி டென்னிஸ் தொடர் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் செர்பிய நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவாக் ஜோகோவிச்சை 19 வயதான டென்மார்க் நாட்டு இளம் வீரர் ஹோல்கர் ரூனே எதிர்கொண்டார்.

  இந்த போட்டியில் ஜோகோவிச் எளிதில் வெற்றி பெற்று பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேவேளை, ரூனேவும் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தரவரிசையில் டாப் 10 வீரர்கள் பலரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

  ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார் ஜோகோவிச். சரி அடுத்த செட்டையும் எளிதாக வென்று ஜோகோவிச் பட்டத்தை தட்டிச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது செட்டில் சிறப்பாக விளையாடிய ரூனே 6-3 என வெற்றி பெற்று ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி தந்தார்.

  இதைத்தொடர்ந்து, பட்டத்தை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் ஆட்டம் பறந்தது.இருவரும் 5-5 என்ற கேமில் இருந்த நிலையில், அடுத்த இரு கேம்களில் அபார ஆட்டதைத் வெளிப்படுத்திய இளம் வீரர் ரூனே இறுதி செட்டை 7-5 என கைப்பற்றினார்.

  இதையும் படிங்க: WATCH - கோலிக்கு என்ன ஆச்சு? பேட்டிங்கின் போது நெஞ்சை பிடித்து நின்ற விராட்! வைரல் வீடியோ

  இதன் மூலம் 3-6,6-3,7-5 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் இளம் வீரர் ரூனே. இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் முதல் முறையாக டாப்-10 பட்டியலில் முன்னேறியுள்ளார் ரூனே.

  Published by:Kannan V
  First published:

  Tags: Novak Djokovic, Paris Masters tennis