ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

காமன்வெல்த் அணியிலிருந்து நீக்கம்: ‘ஹை ஜம்ப்’ வீரர் தேஜஸ்வின் சங்கர் வழக்கு

காமன்வெல்த் அணியிலிருந்து நீக்கம்: ‘ஹை ஜம்ப்’ வீரர் தேஜஸ்வின் சங்கர் வழக்கு

ஹை ஜம்ப் வீரர் தேஜஸ்வின் சங்கர்

ஹை ஜம்ப் வீரர் தேஜஸ்வின் சங்கர்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

காமன்வெல்த் போட்டிகளில் ஹை ஜம்ப் பிரிவில் தகுதி நிலை எட்டியும் அணியில் சேர்க்கப்படாமல் ஒதுக்கப்பட்டதாக இந்திய உயரம் தாண்டுதல் வீரர் தேஜஸ்வின் சங்கர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்திய தடகளக் கூட்டமைப்பு நிர்ணயித்த தகுதி நிலையை எட்டிய பிறகும் தன்னை தேர்வு செய்யாததாக இவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தேஜஸ்வின் சங்கர் தேசிய சாதனையை தன் வசம் வைத்திருப்பவர், அமெரிக்காவில் இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற என்.சி.ஏ.ஏ. சாம்பியன்ஷிப்பில் கன்சாஸ் பல்கலைக் கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த தேஜஸ்வின் காமன்வெல்த் போட்டிகளில் தகுதி பெறுவதற்கான அளவுகோலை பூர்த்தி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது வழக்கறிஞர் மாலக் பட் என்பவர் ஆங்கில நாளேடு ஒன்றில் இது தொடர்பாகக் கூறும்போது, “காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வெல்லக்கூடிய வீரரை எந்த ஒரு காரணமும் இன்றி தேர்வு செய்யாமல் விட்டுள்ளனர், இது சட்ட விரோதம் என்பதோடு தேச நலன்களுக்கு எதிரானது” என்றார்.

மாநிலங்களுக்கு இடையிலான போட்டிகளில் கலந்து கொள்ளாததால் இவரை எடுக்கவில்லை என்று இந்திய தடகள கூட்டமைப்பு விளக்கம் அளித்தாலும் உயர்மட்ட வீரர் என்பதால் இவருக்கு மாநிலங்களுக்கு இடையிலான போட்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்திய தடகளக் கூட்டமைப்பின் தலைவர் ஆதில் சுமரிவாலா கூறும்போது, “சங்கர் தான் தேர்வாக விரும்பவில்லை, அதே போல் மாநிலங்களுக்கு இடையிலான போட்டியிலிருந்து விலக்கும் கோரவில்லை. அமெரிக்காவில் போட்டியில் கலந்து கொள்ளும் முன்பாக எங்களிடம் அனுமதியையும் பெறவில்லை” என்றார்.

இதைத் தொடர்ந்து தேஜஸ்வின் சங்கர் தன் மனுவில், ‘அப்போது மாநிலங்கள் போட்டி தேதியும் அமெரிக்க என்.சி.ஏ.ஏ போட்டி தேதியும் இடித்ததால் நான் ராதாகிருஷ்ணன் நாயர் என்பவரிடம் விலக்கு கேட்டேன். அப்போது வாட்ஸ் அப்பில் அவர் தேர்வுக்கான தகுதியான 2.27 மீ உயரம் தாண்டினால் காமன்வெல்த் தேர்வுக்கு தகுதி பெறுவாய் என்று செய்தி அனுப்பினார்’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இவரது வழக்கு  இன்று புதன் கிழமை விசாரணைக்கு வருகிறது.

First published:

Tags: CWG 2018