மத்திய அரசு மீது வழக்கு தொடர்ந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை அர்ச்சனா காமத்
மத்திய அரசு மீது வழக்கு தொடர்ந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை அர்ச்சனா காமத்
மத்திய அரசு மீது வழக்கு தொடர்ந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை அர்ச்சனா காமத்
ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் இந்திய டேபிள் டென்னிஸ் அணியில் தன்னை சேர்க்காது விடுத்த இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் உலகத் தரவரிசை 4ம் இடத்தில் இருக்கும் டேபிள் டென்னிஸ் வீராங்கனை அர்ச்சனா காமத்.

அர்ச்சனா முதலில் டேபிள் டென்னிஸ் அணியில் 'விதிவிலக்காக' சேர்க்கப்பட்டார், ஆனால் பிறகு இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு வகுத்துள்ள தேர்வு அளவுகோல்களை பூர்த்தி செய்யாததால் நிர்வாகிகள் குழுவால் (CoA) கைவிடப்பட்டு, அவருக்குப் பதிலாக தியா சித்தலே கொண்டுவரப்பட்டார்.
அணியிலிருந்து நீக்கபப்ட்டதை அடுத்து கடும் அதிருப்தியும் கோபமும் மேலிட மகளிர் டேபிள் டென்னிஸ் இரட்டையர் 4ம் தரநிலையில் இருக்கும் அர்ச்சனா, மணிகா பாத்ராவுடன் சேர்ந்து மத்திய அரசு, இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு ஆகியவற்றுகு எதிராக கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை அடுத்து ஜூன் 22-ம் தேதி நடைபெறும் அடுத்த விசாரணையில் ஆஜராகுமாறு அனைத்து தரப்பினருக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய விளையாட்டு ஆணையத்தின் அனுமதிக்கு உட்பட்டு பெண்கள் அணியுடன் பெங்களூரில் எட்டு பேர் கொண்ட அணியை CoA முன்னதாக அறிவித்தது.
அசல் பட்டியலின்படி, தேர்வுக் குழு, மனிகா பத்ரா, அர்ச்சனா, ஸ்ரீஜா அகுலா மற்றும் ரீத் ரிஷ்யா ஆகியோரை சித்தாலேயுடன் அணியில் தேர்வு செய்தது. ஆண்கள் அணியில் அனுபவ வீரர் ஷரத் கமல், ஜி சத்தியன், ஹர்மீத் தேசாய் மற்றும் சனில் ஷெட்டி ஆகியோர் மனுஷுடன் இடம் பிடித்தனர்.
உள்நாட்டு (50 சதவீதம்) மற்றும் சர்வதேச போட்டிகளில் (30 சதவீதம்) வெற்றி பெற்றவர்கள் தான் தேர்வுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள் என்பது அளவுகோல். மீதமுள்ள 20 சதவீதம் தேர்வாளர்களின் விருப்பத்திற்கு விடப்படுகிறது. இருப்பினும், அடுத்த சீசனில் இருந்து தேர்வு அளவுகோல் விகிதத்தை 40, 40 மற்றும் 20 என்று மாற்ற CoA முடிவு செய்துள்ளது.
சித்தாலே, மனுஷ் ஷா, ஸ்வஸ்திகா கோஷ் போன்ற பல வீரர்கள் இந்த மாற்றத்தை எதிர்த்து அர்ச்சனாவுக்கு முன்பாக கோர்ட்டுக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.