Home /News /sports /

தேசியக் கொடியை ஏந்தி அணியை வழிநடத்தும் வாய்ப்பை இழந்தேனே - நீரஜ் சோப்ரா வேதனை

தேசியக் கொடியை ஏந்தி அணியை வழிநடத்தும் வாய்ப்பை இழந்தேனே - நீரஜ் சோப்ரா வேதனை

வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா

வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா

தேசிய கோடியை ஏந்தி அணியை வழிநடத்தும் வாய்ப்பை இழந்ததை எண்ணி மிகவும் ஏமாற்றம் அடைந்தேன் என்று காமன்வெல்த் போட்டிகளிலிருந்து விலகிய ஒலிம்பிக் தங்கமகன், ஈட்டி எறிதல் ஜாம்பவான் நீரஜ் சோப்ரா வருந்தியுள்ளார்.

    தேசிய கோடியை ஏந்தி அணியை வழிநடத்தும் வாய்ப்பை இழந்ததை எண்ணி மிகவும் ஏமாற்றம் அடைந்தேன் என்று காமன்வெல்த் போட்டிகளிலிருந்து விலகிய ஒலிம்பிக் தங்கமகன், ஈட்டி எறிதல் ஜாம்பவான் நீரஜ் சோப்ரா வருந்தியுள்ளார்.

    அவர் தன் வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “எனது பட்டத்தை தக்க வைக்க முடியாமல் போனதும், நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பை இழந்தததும் வருத்தம் அளிக்கிறது. இன்னும் சில தினங்களில் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் தேசிய கோடியை ஏந்தி அணியை வழிநடத்தும் வாய்ப்பை நினைத்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் தேசிய கோடியை ஏந்தி அணியை வழிநடத்தும் வாய்ப்பை இழந்ததை எண்ணி மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்.

    இன்னும் சில தினங்களில் காயங்களில் இருந்து விடுபட்டு விடைவில் களத்திற்கு வருவேன் என்று நம்புகிறேன். கடந்த சில நாட்களாக நான் பெற்ற அனைத்து அன்புக்கும் ஆதரவிற்கும் முழு நாட்டிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் வரும் வாரங்களில் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த என்னுடன் சேர உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஜெய் ஹிந்த்” என்று பதிவிட்டுள்ளார்.

    அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடைபெற்ற 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா தனது 4-வது வீச்சில் ஈட்டியை 88.13 மீட்டர் தூரத்திற்கு வீசி உலக தடகள சாம்பியன்ஷிப் 2-வது இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    உலக தடகள போட்டியில் 19 ஆண்டுகளுக்கு பின் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். அப்படிப்பட்ட நீரஜ் சோப்ரா காமன்வெல்த் போட்டிகளில் ஈட்டி எறிதலில் நிச்சயம் பெரிய சாதனை புரிந்து தங்கம் வெல்வார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அவரது காயம் காரணமான விலகல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Neeraj Chopra

    அடுத்த செய்தி