Home /News /sports /

காமன் வெல்த் போட்டிகளிலிருந்து நீரஜ் சோப்ரா விலகல்

காமன் வெல்த் போட்டிகளிலிருந்து நீரஜ் சோப்ரா விலகல்

நீரஜ் சோப்ரா

நீரஜ் சோப்ரா

டோக்கியோ ஒலிம்பிக் தங்கப்பதக்க வெற்றி மன்னன் நீரஜ் சோப்ரா காமன்வெல்த் போட்டிகளில் ஆட பர்மிங்ஹாம் செல்ல மாட்டார். காயம் காரணமாக நீரஜ் சோப்ரா காமன்வெல்த் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.

    டோக்கியோ ஒலிம்பிக் தங்கப்பதக்க வெற்றி மன்னன் நீரஜ் சோப்ரா காமன்வெல்த் போட்டிகளில் ஆட பர்மிங்ஹாம் செல்ல மாட்டார். காயம் காரணமாக நீரஜ் சோப்ரா காமன்வெல்த் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.

    ஆரிகன் யூஜீனில் நடைபெற்ற உலகட் தடகளப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்திய நீரஜ் சோப்ரா இந்த நிகழ்வின் போதுதான் அடிவயிற்றுக்கும் மேல் தொடைக்கும் இடைப்பட்ட பகுதியில் காயமடைந்தார். இந்தத் தொடரில் கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் தங்கம் வென்றார்.

    இந்நிலையில் காயமடைந்த நீரஜ் சோப்ராவுக்கு ஒருமாத கால ஓய்வு தேவைப்படுவதாக மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அஞ்சு பாபி ஜார்ஜுக்கு அடுத்து உலகத் தடகளத்தில் பதக்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ரா என்பதோடு முதல் ஆடவர் என்பதும் குறிப்பிடத்தக்கத, இவர் காமன் வெல்த் போட்டிகள் கொடியைச் சுமந்து செல்பவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் வேறு வீரரை பரிந்துரை செய்ய இன்று மாலை காமன்வெல்த் ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்று கூடி முடிவெடுப்பார்கள். ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட்டில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டிகளில் ஈட்டி எறிதல் சாம்பியன் ஆவார் நீரஜ் சோப்ரா. இவர் தங்கம் வெல்ல இவரது நண்பரும் போட்டியாளருமான ஆண்டர்சன் பீட்டர்ஸ் அப்போது வெண்கலம் வென்றார். பிறகு ஜகார்த்தாவில் ஆசியப் போட்டிகளில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா.

    இருமுறை 90மீ தூரம் விட்டெறிதலுக்கு அருகில் வந்தார் நீரஜ் சோப்ரா, இந்த முறை ஆண்டர்சன் பீட்டர்ஸ் காமன்வெல்த்தில் கலந்து கொள்வதால் நீரஜ் இல்லாதது அவரது பதக்க வாய்ப்பை அதிகரித்துள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Neeraj Chopra

    அடுத்த செய்தி