Home /News /sports /

காமன்வெல்த் பேட்மிண்டன்: தங்கம் வென்றார் லக்‌ஷ்ய சென்

காமன்வெல்த் பேட்மிண்டன்: தங்கம் வென்றார் லக்‌ஷ்ய சென்

காமன் வெல்த் பேட்மிண்டனில் தங்கம் வென்றார் லக்‌ஷய சென்

காமன் வெல்த் பேட்மிண்டனில் தங்கம் வென்றார் லக்‌ஷய சென்

பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் 2022 பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷய சென் மலேசிய வீரர் சே யாங் என்பவரை வீழ்த்தி இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் வென்று கொடுத்துள்ளார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் 2022 பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷய சென் மலேசிய வீரர் சே யாங் என்பவரை வீழ்த்தி இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் வென்று கொடுத்துள்ளார்.

    மகளிர் ஒற்றையரில் கனடா வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து தங்கம் வெல்ல ஆடவர் ஒற்றையர் இறுதியில் இந்திய வீரர் லக்‌ஷய சென் தங்கம் வென்றார். 20 தங்கப்பதக்கங்களை இதோடு இந்தியா வென்றுள்ளது.

    முதல் செட்டில் இருவரும் 7-7 என்று சமநிலை வகித்தாலும் லக்‌ஷ்ய சென் செய்த சில தவறுகளினால் மலேசிய வீரர் சே யாங் 11-7 என்று முன்னிலை பெற்றார். ஆனால் இருவரும் விடாப்பிடியாக ஆட லக்‌ஷயா சென்னும் தன் ஆட்டத்தை மேம்படுத்த 15-17 என்று முன்னேறி வந்து மலேசிய வீரரை நெருக்கினார்.

    அதன் பிறகு மலேசியாவ் ஈரர் 3 புள்ளிகளை வரிசையாக எடுத்து 20-19 என்று முன்னிலை பெற்றார், ஆனால் கடைசியில் மலேசிய வீரர் யாங் அடித்த ஷாட்டை அவுட் என்று நினைத்து எடுக்காமல் விட்டார் இந்திய வீரர் லக்‌ஷய சென் இது பெரும் தவறாக மலேசிய வீரர் 21-19 என்று முதல் செட்டைக் கைப்பற்றினார்.

    ஆனால் அடுத்த 2வது செட்டில் லக்‌ஷய சென் ஆக்ரோஷத்தைக் கூட்டி பிரமாதமான சில ஸ்மாஷ்களையும் நெட் அருகில் வந்து அருமையான வாலிகளையும் அருமையான சர்வ்களையும் அடித்து 21-9 என்று லக்‌ஷய சென் இரண்டாவது செட்டில் மலேசிய வீரரை நொறுக்கி 1-1 என்று சமன் செய்தார்.

    3வது செட்டில் முதல் 2 பாயிண்ட்களை சென் விட்டாலும் பிறகு மலேசிய வீரரின் ஆக்ரோஷத்துக்கு மடியாமல் சில கடினமான கோணங்களில் தன் ஷாட்களையும் சர்வ்களையும் அடிக்க 11-7 என்று முன்னிலை பெற்று அதன் பிரகு 16-12 என்று 4 புள்ளிகள் இடைவெளியில் வெற்றியை நோக்கி முன்னேறினார்.

    கடைசியில் 17-13 என்று யாங் நெறுக்கினார். ஆனால் மலேசியா வீரர் மீண்டும் தவறிழைக்க லக்‌ஷய சென் 18-13 என்று 5 புள்ளிகள் முன்னிலை வகித்தார். ஆனால் மலேசிய வீரர் விடவில்லை 14-18 என்று சற்றே நெருங்கி வந்தார். அப்போது மலேசிய வீரர் யாங் காயமடைந்தார். சிகிச்சை பெற்று மீண்டும் வந்த போது லக்‌ஷய சென் ஒரு பிரமாத ஸ்மாஷ் மூலம் 19-14 என்று வெற்றிக்கு ஒரு அடி எடுத்து வைத்தார்.

    ஆனால் அடுத்த ஷாட்டை வெளியே அடிக்க மலேசிய வீரர் 15-19 என்று இடைவெளியை சற்றே குறைத்தார். பிறகு மேலும் 2 புள்ளிகளைப் பெற்றார் மலேசியா வீரர். 20-16 என்ற நிலையில் ஒரு ஷாட்டை மலேசியா வீரரைத் தாண்டி அடித்து தன் பேட்மிண்டன் மட்டையை ரசிகர்களிடத்தில் விட்டெறிந்து கொண்டாடினார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Badminton, Commonwealth Games

    அடுத்த செய்தி