Home /News /sports /

காமன்வெல்த் விளையாட்டு: இந்தியா ஒரே நாளில் 5 தங்கப் பதக்கங்கள் வென்று அசத்தல்

காமன்வெல்த் விளையாட்டு: இந்தியா ஒரே நாளில் 5 தங்கப் பதக்கங்கள் வென்று அசத்தல்

காமன்வெல்த் விளையாட்டு

காமன்வெல்த் விளையாட்டு

Commonwealth 2022: இந்திய அணி 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என 55 பதக்கங்களுடன் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி ஒரே நாளில் 4 தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.

    இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆடவருக்கான 51 கிலோ எடைப் பிரிவு பிளை வெயிட் குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் சார்பில் அமித் பங்கல் களம் கண்டார். அவர், இறுதிச் சுற்றில் எதிர்கொண்ட இங்கிலாந்தின் கியாரன் மெக்டொனால்டை, ஆரம்பம் முதலே ஆக்ரோஷ குத்துகள் மூலம் நிலைகுலையச் செய்தார். இறுதியில், 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.

    மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவு மிடில்வெயிட் குத்துச்சண்டை இறுதிச் சுற்றில், இந்தியாவின் நீத்து கங்காஸ், இங்கிலாந்தின் டேமி ஜேட் உடன் மோதினார். இப்போட்டியில், நீத்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இங்கிலாந்து வீராங்கனையை பின்வாங்கச் செய்தார். முடிவில், 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்ற நீத்து கங்காஸ், தங்கத்தை கைப்பற்றினார்.

    தடகளத்தில் டிரிபிள்ஜம்ப் எனப்படும் மும்முறை தாண்டுதல் போட்டியில், இந்தியாவின் எல்டாஸ் பால், 17 புள்ளி 03 மீட்டர் நீளம் தாண்டி, முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான அப்துல் அபுபக்கர், 17 புள்ளி 02 மீட்டர் நீளம் தாண்டி, வெள்ளி பதக்கத்தை வசப்படுத்தினார். இதனால், டிரிபிள்ஜம்ப் போட்டியில் இந்தியா இரட்டை பதக்கம் வென்று அசத்தியது. அதேவேளையில், இப்போட்டியில் தமிழக வீரர் பிரவின் சித்ரவேல் நூலிழையில், வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டார்.

    காமன்வெல்த் மகளிர் ஹாக்கித் தொடரில், மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 1-0 என இந்தியா முன்னிலை வகித்த நிலையில், கடைசி நிமிடத்தில் நியூசிலாந்து பதில் கோல் அடித்து சமன் ஆனது. அதனால் வெற்றியை தீர்மானிக்க ஷூட்-அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில், 2-1 என்ற கோல்கணக்கில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தியது.

    இதையும் படிங்க: காமன்வெல்த்: மும்முறை தாண்டுதலில் இந்தியாவிற்கு ஒரே போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம்!

    மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் அனு ராணி, வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார். இவர், 60 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து பதக்கத்தை தட்டிச் சென்றார். ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்ட போட்டியில், இந்தியாவின் சந்தீப் குமார் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார். மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவு லைட் பிளைவெயிட் குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியன் நிகத் ஜரீன் களம் கண்டார். இந்தியாவின் இளம் நட்சத்திரமான ஜரீன், இறுதிச் சுற்றில் வடக்கு அயர்லாந்தின் கார்லி மெக்னாலை எதிர்கொண்டார். ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகத் ஜரீன், 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை சூடிக் கொண்டார்.

    டேபிள் டென்னிஸின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல், ஸ்ரீஜா அகுல்லா இணை தங்கம் வென்றது.  காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது. ஆஸ்திரேலியாவுடனான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற அந்த அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய இந்திய அணி 19.3 ஓவர்களில், 152 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    64 தங்கம் உட்பட 170 பதக்கங்களுடன் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தில் உள்ளது. இந்திய அணி 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என 55 பதக்கங்களுடன் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Commonwealth Games, Indian team, Team India

    அடுத்த செய்தி