Home /News /sports /

56 நாடுகளை விட அதிக பதக்கங்களை வென்று மகா சாதனை படைத்த ஆஸ்திரேலியா வீராங்கனை

56 நாடுகளை விட அதிக பதக்கங்களை வென்று மகா சாதனை படைத்த ஆஸ்திரேலியா வீராங்கனை

56 நாடுகளை விட அதிக பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை

56 நாடுகளை விட அதிக பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 28 வயதான எம்மா மெக்கியோன், 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 56 நாடுகள் வென்ற பதக்கங்களை விட அதிக பதக்கங்களை வென்று தனித்துவமான சாதனையைப் படைத்துள்ளார்.

    எம்மா மெக்கியோன் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நீச்சலில் ஒரு வெண்கலம், ஒரு வெள்ளி மற்றும் ஆறு தங்கப் பதக்கங்களை வென்றார். CWG 2022 இல் பங்கேற்ற 72 நாடுகள் மற்றும் பிரதேசங்களில், 16 நாடுகள் மட்டுமே எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளன. ஆனால் தனி வீராங்கனையாக 8 பதக்கங்களை வென்று தனித்துவ சாதனை படைத்துள்ளார் இந்த ஆச்சரிய ஆஸ்திரேலிய வீராங்கனை.

    எம்மா ஜெனிஃபர் மெக்கியோன் நான்கு முறை உலக சாதனை படைத்தவர், ஒரு தற்போதைய மற்றும் மூன்று முன்னாள் 4×100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ​​ரிலே சாதனை தன் வசம் வைத்துள்ளவர். 2020 ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து அவர் பெற்ற 11 ஒலிம்பிக் பதக்கங்கள் அவரை ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான ஒலிம்பிக் வீரராக அலங்கரித்தது. இதோடு ரியோ டி ஜெனிரோவில் நடந்த 2016 கோடைகால ஒலிம்பிக்கில் ஒரு தங்கப் பதக்கத்தையும் 2020 முதல் நான்கு தங்கப் பதக்கங்களையும் வென்ற ஆஸ்திரேலியாவின் அதிசய வீராங்கனை எம்மா மெக்கியோன்.

    ஆஸ்திரேலியா 67 தங்கம், 57 வெள்ளி, 54 வெண்கலம் என மொத்தம் 178 பதக்கங்களுடன் முதலிடத்திலும், போட்டியை நடத்தும் நாடான இங்கிலாந்து 57 தங்கம், 66 வெள்ளி, 53 வெண்கலம் என மொத்தம் 176 பதக்கங்களுடன் முதலிடத்திலும் உள்ளன. கனடா 26 தங்கம், 32 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 92 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Commonwealth Games

    அடுத்த செய்தி