Euro 2020: லூகா மோட்ரிச் அபாரம்- ஸ்காட்லாந்தை வீட்டுக்கு அனுப்பிய குரேஷியா

குரேஷியாவின் ஆட்ட நாயகன் லூகா மோட்ரிச். | யூரோ கோப்பை 2021

குரூப் டி பிரிவின் மற்றொரு யூரோ கோப்பை கால்பந்தாட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை குரேஷியா அணி 3-1 என்ற கோல் கணக்கில் அடித்து நொறுக்கியது. இதன் மூலம் குரேஷியா 2வது இடம்பிடித்து நாக்-அவுட் இறுதி-16 அணி சுற்றுக்கு முன்னேற ஸ்காட்லாந்து கண்ணீருடன் வெளியேறியது.

  • Share this:
    ஹாம்ப்டென் பார்க்கில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் குரேஷியாவின் விலாசிச் 17வது நிமிடத்தில் முதல் கோலை அடிக்க 42வது நிமிடத்தில் ஸ்காட்லாந்தின் மெக்ரிகர் கோல் அடித்து சமன் செய்தார். ஆனால் இடைவேளைக்குப் பிறகு குரேஷிய நட்சத்திர வீரர் லூக்கா மோட்ரிச் அற்புதமான ஒரு கோலை அடித்து முன்னிலை கொடுக்க, மற்றொரு அனுபவ வீரர் பெரிசிச் 77வது நிமிடத்தில் 3வது கோலை அடிக்க குரேஷியா 3-1 என்று வென்றது.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆக்ரோஷம் காட்டி அதிவேகக் கால்பந்தை ஆடியது ஸ்காட்லாந்து 1 நிமிடத்துக்குள்ளேயே 2 கார்னர் வாய்ப்புகளைப் பெற்றது. ஆனால் குரேஷிய கோல் கீப்பர் டொமினிக் லிகாவோவிச் விழிப்புடன் செயல்பட்டார்.

    ஸ்காட்லாந்தின் ஆக்ரோஷ ஆட்டத்தைத் தடுக்க பந்தை தங்கள் வசம் கொண்டு வரும் தேவையை உணர்ந்த குரேஷியா நீண்ட நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருக்க வேண்டிய அவசியத்தையும் உணர்ந்தது.

    ஸ்காட்லாந்தின் ஜான் மெக்கின் குரேஷியாவிடமிருந்து பந்தைப் பறித்து பந்துடன் உள்ளே புகுந்தார். அவரது கிராஸ் இன்னொரு ஸ்காட் வீரர் சே ஆடம்ஸின் காலுக்கு நூலிழையில் சென்றது. சிக்கியிருந்தால் கோல் ஆகியிருக்கும், ஆனால் சிக்கவில்லை, பிறகு சே ஆடம்ஸ் சற்று தூரத்திலிருந்து மேற்கொண்ட முயற்சியும் ஸ்காட்லாந்துக்குப் பயனளிக்கவில்லை.

    இதையும் படிச்சுப் பாருங்க: Euro 2020 | யூரோ 2020: ரகீம் ஸ்டெர்லிங்கின் ஒரே கோல்: செக். குடியரசை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு இங்கிலாந்து தகுதி

    சில முறை குரேஷியாவின் தாக்குதலை ஸ்காட் கோல் கீப்பர் மார்ஷல் முன்னால் வந்து தடுத்தார். குரேஷியாவின் புரூனோ பெட்ரோவிச் அச்சுறுத்தலாக ஆடினார், ஆனால் ஸ்காட்லாந்து அந்த அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாததுதான் அதன் வீழ்ச்சிக்குக் காரணம். இந்த நிலையில்தான் குரேஷிய வீரர் ஜோசப் ஜுரானோவிச் வலது புறத்திலிருந்து ஒரு கிராஸ் ஷாட் ஆட பெரிசிச் எம்பி தலையால் அதனைக் கட்டுப்படுத்தி கீழே கொண்டு வந்தார் அதை விலாசிச் கோலாக மாற்றினார்.

    இந்த கோலுக்குப் பிறகு ஸ்காட்லாந்து ரசிகர்கள் சற்றே கூச்சலைக் குறைத்துக் கொண்டனர், ஆனால் லூகாச் மோட்ரிச் 25 அடி தூரத்திலிருந்து அடித்த ஷாட் கோல் வலையைக் கிழிக்க ஸ்காட்லாந்து ரசிகர்கள் அமைதியடைந்தனர். இந்தத் தருணம் முதல் குரேஷியா ஆதிக்கம் செலுத்தியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இடைவேளைக்கு முன்னர் ஸ்காட்லாந்துக்கு கோல் வாய்ப்புக் கிடைத்தது. ராபர்ட்சன் கிராஸ் ஒன்று சே ஆடம்சின் பின் காலில் பட்டது. குரேஷிய வீரர் டோமகாஜ் விடா இதனை வெளியே அடிக்க முயன்றார், ஆனால் பாக்சுக்கு அருகே மெக்ரிகருக்கு பந்து வந்தது. அவர் லேசாக டச் செய்து பிறகு கோலை நோக்கி உதைக்க பந்து கோலுக்குள் கதறியது. சமன் செய்தது ஸ்காட்லாந்து.

    இந்நிலையில்தான் மோட்ரிச்சின் அந்த அசாதாரணமான கோல் வந்தது. பாக்ஸுக்கு வெளியே கோவாசிச் பந்தை வைத்து விளையாட அவரை அனுமதித்தது ஸ்காட்லாந்து டிபன்ஸ். அவர் சாதாரணமாக மோட்ரிச்சிடம் அடிக்க அவர் முறையாக கோலாக மாற்றினார் 2-1 என்று முன்னிலை பெற்றது குரேஷியா.

    3வது கோலும் மோட்ரிச் உதவியுடன் பெரிசிச் அடித்த கோல் ஆகும். 3-1 என்று குரேஷியா வென்று 2ம் இடம் பிடித்தது.
    Published by:Muthukumar
    First published: