நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல் நஸ்ர்(Al Nassar) என்ற கிளப் அணிக்கு விளையாட புதிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் அதிக சம்பளம் பெறும் கால்பந்து வீரர் என்ற சாதனையை ரொனால்டோ பெற்றுள்ளார். சவுதி அரேபிய ஊடகங்களின் தகவல்படி, ஆண்டுக்கு 177 மில்லியன் யூரோ, அதாவது இந்திய மதிப்பின் படி ரூ.1,770 கோடி ஆண்டு சம்பளத்திற்கு ரொனால்டோவை அல் நஸர் கிளப் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்த அறிவிப்பை அல் நஸர் கிளப் ட்விட்டரில் பதிவிட்டது. அந்த பதிவில், "வரலாறு உருவாகிறது. இந்த ஒப்பந்தம் எங்கள் கிளப் மட்டுமல்லாது, எங்கள் லீக், எங்கள் நாடு, எங்கள் எதிர்கால தலைமுறையினருக்கே சாதனைக்கான உந்து சக்தியை தரும். கிறிஸ்டியானோ ரொனால்டோவை எங்கள் கிளப்பிற்கு வரவேற்கிறோம்" என்று பதிவிட்டுள்ளது.
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த முன்னணி வீரரான கிரிஸ்டியானோ ரொனால்டோ தனது கால்பந்து வாழ்வின் சாதனை பயணத்தை இங்கிலாந்தின் புகழ்பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியை அடித்தளமாகக் கொண்டு தொடங்கினார். பின்னர் ஸ்பெயினின் முன்னணி கிளப்பான ரியல் மாட்ரிட் அணியுடன் 2009இல் ஒப்பந்தம் செய்து விளையாடத் தொடங்கினார் ரொனால்டோ.
History in the making. This is a signing that will not only inspire our club to achieve even greater success but inspire our league, our nation and future generations, boys and girls to be the best version of themselves. Welcome @Cristiano to your new home @AlNassrFC pic.twitter.com/oan7nu8NWC
— AlNassr FC (@AlNassrFC_EN) December 30, 2022
பின்னர் பல ஆண்டுகள் கழித்து தன்னை வளர்த்தெடுத்த தாய் கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மீண்டும் 2021ஆம் ஆண்டில் கம்பேக் கொடுத்தார். ஆனால் ஓராண்டிலேயே கிளப் நிர்வாகம், மேலாளர் ஆகியோருடன் ரொனால்டோவுக்கு மோதல் வெடித்தது. இதன் காரணமாக கடந்த நவம்பர் மாதம் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இருந்து வெளியேறினார் ரொனால்டோ.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cristiano Ronaldo, Football, Saudi Arabia