Home /News /sports /

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்ததால் சோகம்

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்ததால் சோகம்

ரொனால்டோ

ரொனால்டோ

போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் சோகம் பொங்க அறிவித்தார். மனைவி ஜார்ஜினா ரோட்ரிகஸுக்கு இரட்டைக் குழந்தைகளை எதிர்பார்த்தார் ரொனால்டோ, ஒரு பெண், ஒரு ஆண் என்று இரட்டைக் குழந்தைப் பிறந்தது, ஆனால் இதில் ஆண் குழந்தை உயிரிழந்தது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் சோகம் பொங்க அறிவித்தார். மனைவி ஜார்ஜினா ரோட்ரிகஸுக்கு இரட்டைக் குழந்தைகளை எதிர்பார்த்தார் ரொனால்டோ, ஒரு பெண், ஒரு ஆண் என்று இரட்டைக் குழந்தைப் பிறந்தது, ஆனால் இதில் ஆண் குழந்தை உயிரிழந்தது.

    37 வயதான ரொனால்டோ, "கடினமான" காலகட்டத்தில் தனிமைக்கான கோரிக்கையை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில் தனக்கும் ஜார்ஜினாவுக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறக்கப் போவதாகப் பகிர்ந்து கொண்டார்.

    இந்நிலையில் பிறந்த ஆண் குழந்தை இறந்ததை சோகத்துடன் பதிவிட்ட ரொனால்டோ, “எங்கள் ஆண் குழந்தை இறந்துவிட்டதை ஆழ்ந்த சோகத்துடன் அறிவிக்கின்றோம். எந்தவொரு பெற்றோரும் உணரக்கூடிய மிகப்பெரிய வலி இது. எங்களின் பெண் குழந்தை பிறந்தது மட்டுமே இந்த தருணத்தில் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ பலத்தை அளிக்கிறது.

    டாக்டர்கள் மற்றும் செவிலியர்களின் கவனிப்பு மற்றும் ஆதரவிற்காக நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். இந்த இழப்பால் நாங்கள் மிகவும் உடைந்து நொறுங்கியுள்ளோம். இந்த கடினமான நேரத்தில் தனிமையில் இருக்க விரும்புகிறோம். குழந்தை, நீ எங்கள் தேவதை. நாங்கள் எப்போதும் உங்களை நேசிப்போம்” என்று போர்த்துகீசிய கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோ அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

    "உங்கள் வலி எங்கள் வலி, கிறிஸ்டியானோ," என்று மான்செஸ்டர் யுனைடெட் ட்வீட் செய்துள்ளது. "இந்த நேரத்தில் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அன்பையும் வலிமையையும் அனுப்புகிறேன்."

    ரியல் மாட்ரிட் தனது வலைப்பக்கத்தில் பதிலளித்து, கிளப், "எங்கள் அன்பான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவரது மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் எதிர்பார்த்த குழந்தைகளில் ஒருவரின் மரணத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம். ரியல் மாட்ரிட் சோகத்தில் இணைகிறது. முழு குடும்பத்தின் மீது எங்கள் அன்பையும் பாசத்தையும் காட்ட விரும்புகிறோம்." என்று ட்வீட் செய்துள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cristiano Ronaldo

    அடுத்த செய்தி