ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் விலை உயர்ந்த கார் விபத்தில் சிக்கியது

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் விலை உயர்ந்த கார் விபத்தில் சிக்கியது

படம்: ட்விட்டர்

படம்: ட்விட்டர்

போர்ச்சுக்கல் மற்றும் இங்கிலிஷ் பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து முன்கள ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆடம்பர கார் புகாட்டி வெய்ரான் திங்கள்கிழமை ஸ்பெயினின் மஜோர்கா நகரில் பெரும் விபத்தில் சிக்கியது. விபத்தைத் தொடர்ந்து 2.1 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அந்த கார் நீல நிற தார்பாலின் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  போர்ச்சுக்கல் மற்றும் இங்கிலிஷ் பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து முன்கள ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆடம்பர கார் புகாட்டி வெய்ரான் திங்கள்கிழமை ஸ்பெயினின் மஜோர்கா நகரில் பெரும் விபத்தில் சிக்கியது. விபத்தைத் தொடர்ந்து 2.1 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அந்த கார் நீல நிற தார்பாலின் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

  போர்சுகலை சேர்ந்த உலகின் மிகவும் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கால்பந்தாட்ட உலகில் அதிக கோல்களை அடித்து முதலிடம் வகித்து வருகிறார். கால்பந்தாட்டத்தை தாண்டி ரொனால்டோ ஒரு கார் பிரியர் ஆவார். இவரின் கேரேஜில் பல விலையுயர்ந்த கார்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

  இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் ஸ்பெயினில் விடுமுறையில் இருக்கிறார் இந்த நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரூ .16 கோடி மதிப்பிலான புகாட்டி வேய்ரான் கார் இன்று விபத்தில் சிக்கியுள்ளது. ஸ்பெய்னின் .மஜோர்காவில் உள்ள ஒரு வீட்டின் மீது கார் மோதியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன ,விபத்தின் போது காரை ஓட்டிச் சென்றது ஊழியர் தான் என்றும் ரொனால்டோ அல்ல என்றும் முதல்கட்ட தகவல்கள் உறுதி செய்துள்ளன.

  மேலும் இந்த விபத்தில் ஓட்டுநருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் காரின் முன்பகுதியில் சில கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் உறுதி செய்துள்ளன.

  ரொனால்டோ தற்போது தனது குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்கும் சா கோமா, புன்யோலா, பால்மா டி மஜோர்காவின் குடியிருப்பு எஸ்டேட்டில் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த ஓட்டுநர் காரை சுவரில் மோதியதாகக் கூறப்படுகிறது.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Cristiano Ronaldo