முகப்பு /செய்தி /விளையாட்டு / இன்ஸ்டாகிராமில் நுழைந்த 24 மணி நேரத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்ற ஜுனியர் ரொனால்டோ...!

இன்ஸ்டாகிராமில் நுழைந்த 24 மணி நேரத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்ற ஜுனியர் ரொனால்டோ...!

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

இன்ஸ்டாகிராமில் நுழைந்த 24 மணிநேரத்தில் 10 லட்சம் பின்தொடர்பாளர்களை கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவின் மகன் பெற்றுள்ளார். 

கால்பந்து உலகின் ஜாம்பவானான கிறிஸ்டியானா ரொனால்டோவின் மகன் தற்போது இன்ஸ்டாகிராமில் நுழைந்துள்ளார். ’மினி கிறிஸ்டியானோ ரொனால்டோ’ என்ற பெயரில் தனது கணக்கை தொடங்கி உள்ள அவரை, சில மணிநேரங்களிலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் ’ஃபாலோ’ செய்ய தொடங்கியுள்ளனர்.

ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்க்சுகீஸ் மற்றும் இத்தாலி உள்ளிட்ட நான்கு மொழிகளில் தனது கணக்கை தொடங்கியுள்ள அவர், முதன் முதலாக பதிவிட்ட வீடியோ பதிவை மட்டும் 35 லட்சத்திற்கும் அதிகமான பேர் பார்த்துள்ளனர்.

தற்போது வரை வெறும் 6 பதிவுகளை மட்டுமே பதிவிட்டுள்ள இவருக்கு, இதுவரை 1 மில்லியன் அதாவது 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் கிடைத்துள்ளனர்.




 




View this post on Instagram




 

Hola chic@s!! Esta es mi nueva cuenta de instagram espero que os guste 🙂🤗


A post shared by Mini Cristiano Ronaldo (@minicristianoronaldo2010.___) on



ஆனால், இவரோ இதுவரை தனது தந்தை கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்ட குடும்பத்தினர்கள் நெருங்கிய நண்பர்கள் என மொத்தமே 5 பேரை தான் பின் தொடர்கிறார்.

இதன்மூலம் கிறிஸ்டிய்னோ ரொனால்டோ மட்டுமல்ல அவர் மகனுக்கும் ’நல்ல மவுசு’ உள்ளதென்பது நிருபணமாகியுள்ளது.

First published:

Tags: Cristiano Ronaldo