Cristiano Ronaldo: வரலாறு படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ- ஹாட்ரிக்குடன் அதிக கோல்கள் உலக சாதனை
Cristiano Ronaldo: வரலாறு படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ- ஹாட்ரிக்குடன் அதிக கோல்கள் உலக சாதனை
ஹாட்ரிக் சாதனையுடன் அதிக கோல்கள் உலக சாதனை வரலாறு படைத்த ரொனால்டோ
கடந்த கோடையில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்பிய பிறகு முதல் ஹாட்ரிக் கோல்களை அடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ 807 கோல்களை அடித்து, ஆண்கள் கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரராக மகுடம் சூட்டிக்கொண்டார்
கடந்த கோடையில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்பிய பிறகு முதல் ஹாட்ரிக் கோல்களை அடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ 807 கோல்களை அடித்து, ஆண்கள் கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரராக மகுடம் சூட்டிக்கொண்டார்.
மான்செஸ்டர் யுனைடெட் முன்கள வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சனிக்கிழமை (மார்ச் 12) அன்று பிரீமியர் லீக் போட்டியாளர்களான டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பருக்கு எதிராக ஒரு சிறந்த ஹாட்ரிக் சாதனையுடனான வெற்றிக்குப் பிறகு 807 கோல்களுடன் தொழில்முறை கால்பந்தாட்டத்தின் அனைத்து நேர முன்னணி வீரர் என்ற சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்து வரலாறு படைத்தார்.
கால்பந்தில் எல்லா நேரத்திலும் அதிக கோல் அடித்தவர் என்ற விவரங்களை FIFA அதிகாரப்பூர்வ சாதனையை வைத்திருக்கவில்லை, ஆனால் 1931 முதல் 55 வரை ஆடிய ஆஸ்திரிய - செக். வீரர் ஜோசப் பிகான் 805 கோல்களை அடித்தார் என்று ஃபீபா கூறுகிறது.
நேற்று ஓல்ட் ட்ராஃபோர்டில் ரொனால்டோவின் 12-வது நிமிட தொடக்க கோல் அபாரமக, தூரத்திலிருந்து அடிக்கப்பட்ட ஒரு சிறந்த ஸ்ட்ரைக், இந்த கோல் அவருக்கு சாதனையை சமன் செய்ய உதவியது. அதாவது 805 கோல்கள் சாதனையை சமன் செய்தார்.
பிறகு கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் வீரர் ஜேடன் சாங்கோவின் பாஸை நீட்டாக கோலாக்கினார். இதன் மூலம் மான்செஸ்டர் யுனைடெட் 2-1 என்று முன்னிலை பெற்றது. பிறகு தலையால் முட்டி இன்னொரு கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்ததோடு அதிக கோல்கள் எண்ணிக்கையான 807 என்ற எண்ணிக்கையை எட்டி புதிய வரலாறு படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
மான்செஸ்டரின் அதிதீவிர ரசிகர்கள் ரொனால்டோ ஹாட்ரிக் சாதனை புரிந்து தங்கள் அணி வென்றதையடுத்து ஸ்டேடியமே திருவிழாக்கோலம் பூண்டது. இது ரொனால்டோவின் வாழ்க்கையில் 59வது ஹாட்ரிக் மற்றும் அவர் திரும்பியதைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு முதல் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கான முதல் ஹாட்ரிக் ஆகும்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.