ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ரசிகருக்கு வித்தியாசமான முறையில் ஆட்டோகிராஃப் போட்ட தோனி… வைரல் வீடியோ…

ரசிகருக்கு வித்தியாசமான முறையில் ஆட்டோகிராஃப் போட்ட தோனி… வைரல் வீடியோ…

தோனி

தோனி

2008ல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி இடம் பெற்று வருகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரசிகர் ஒருவருக்கு வித்தியாசமான முறையில் கிரிக்கெட் வீரர் தோனி ஆட்டோகிராப் அளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று தோனி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்றாலும், அவரை பற்றிய தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகின்றன. தோனி எந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், அது சம்பந்தமான தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படுகிறது.

இன்றளவும் அதிகமான விளம்பர நிறுவனங்கள் தங்களது பிராண்டிங் அம்பாசிடராக தோனியை நியமிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. அதேநேரம் சமூக வலைதள பக்கங்களில் தோனி அக்கவுண்ட் வைத்திருந்தாலும், அவற்றை அவர் அதிகமாக பயன்படுத்துவது கிடையாது. ஆனால் அவரது ரசிகர்களுடைய சமூக வலைதள பக்கங்களில் இருந்து நாள்தோறும் தோனி தொடர்பான தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

''நன்றி போர்ச்சுகல்..என் கனவு முடிவுக்கு வந்தது'' - கிறிஸ்டியானோ ரொனால்டோ உருக்கமான பதிவு!

அந்த வகையில் தோனி எம்பயர் என்ற ட்விட்டர் பக்கத்தில் இருந்து, ரசிகர் ஒருவர் முதுகில் தோனி ஆட்டோகிராஃப் போடும் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

தோனி அடுத்ததாக 2023 ஆம் ஆண்டில் நடக்கவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறார். இதுதொடர்பான வீரர்களின் ஏலம் இம்மாதம் 23ஆம் தேதி நடக்க உள்ளது. 2008ல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி இடம் பெற்று வருகிறார். அடுத்த ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெறுவாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டுள்ள விளையாட்டு வீரர்கள் - தோனி (கேப்டன்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்சு சேனாபதி, மொயீன் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி சிங், தீபக் சௌத்ரி சிங், தீபக் சௌத்ரினா, மதீஷா சௌத்ரி , பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா

90ஸ் கிட்ஸ்களின் 'சிக்ஸர் கிங்'.. உலகக்கோப்பை நாயகன் யுவராஜ் சிங்கின் பிறந்தநாள் இன்று!

விடுவிக்கப்பட்ட வீரர்கள் - டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா, கே.எம்.ஆசிப், நாராயண் ஜெகதீசன்

First published:

Tags: Dhoni