Covid-19 scare in IPL 2021 | கொரோனா அச்சுறுத்தல்: நாளைய போட்டியைத் துறக்க சென்னை சூப்பர் கிங்ஸ் முடிவு
Covid-19 scare in IPL 2021 | கொரோனா அச்சுறுத்தல்: நாளைய போட்டியைத் துறக்க சென்னை சூப்பர் கிங்ஸ் முடிவு
சிஎஸ்கே
போட்டிகளை மும்பையில் நடத்தவும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியான சூழ்நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகளையே ஒத்திப் போடலாமா என்ற பரிசீலனையும் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஐபிஎல் அணி வீரர்கள், மைதான பணியாளர்கள், உட்பட கொரோனா பரவத் தொடங்கியுள்ளதையடுத்து நாளை, புதன் கிழமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தைத் துறக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
ஐபிஎல் 2021-லும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் சிஎஸ்கே அணி வீரர்கள் 6 நாட்களுக்கு கடினமான தனிமைக்குட்படுத்திக் கொண்டுள்ளனர். சிஎஸ்கே அணி தற்போது டெல்லியில் உள்ளது. கொரோனா பாசிட்டிவ் செய்திகள் வரத்தொடங்கியதையடுத்து பயிற்சியையும் ரத்து செய்தது சிஎஸ்கே அணி.
திங்களன்று சிஎஸ்கே அணி உறுப்பினர் இருவருக்கு கொரோனா என்ற செய்திகள் வெளியாகின. சிஎஸ்கே சி.இ.ஓ. காசி விஸ்வநாதன், பவுலிங் கோச் எல்.பாலாஜி, பஸ் ஓட்டுநர் ஆகியோருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று செய்திகள் வெளியாகின. குறிப்பாக பாலாஜி வீரர்களுடன் அமர்ந்திருந்தார்.
From what I know @ChennaiIPL is also in hard quarantine and they won’t be playing tomorrow. Absolutely correct call with the Balaji case. @IPL you have to press the reset button and do things based on protocol.
இந்நிலையில் சிஎஸ்கே அணி நாளைய போட்டியை துறக்க முடிவெடுத்துள்ளதால் போட்டி ஒத்தி வைக்கப்படுவதாகத் தெரிகிறது. மேலும் போட்டிகளை மும்பையில் நடத்தவும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியான சூழ்நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகளையே ஒத்திப் போடலாமா என்ற பரிசீலனையும் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் பாதுகாப்பு வளையத்துக்குள்ளேயே கொரோனா ஊடுருவியது பலரையும் அச்சுறுத்தியுள்ளது.
மும்பையில் 3 மைதானங்கள் இருப்பதால் போட்டிகளை அங்கு நடத்த வாய்ப்புள்ளது. முதல் சுற்றில் 10 போட்டிகள் வான்கடேயில் நடந்தன. இந்நிலையில் மீதிப் போட்டிகளை ப்ரபர்ன் மற்றும் டி.ஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடத்த வாய்ப்புள்ளது.
கேகேஆர் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியருக்குக் கொரோனா என்பதால் கொல்கத்தா வீரர்கள் கடும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொண்டுள்ளனர்.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.