ஒலிம்பிக் தங்கம் வென்ற இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி வீரர்கள் இருவர் ஒரேநாளில் மரணம்

கொரோனாவுக்கு பலியான முன்னாள் ஹாக்கி வீரர்கள் ரவீந்திரபால் சிங், கவுஷிக்.

மாஸ்கோவில் 1980-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பி போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் வீரர்கள் ரவீந்திர பால் சிங், மகராஜ் கிஷன் கவுஷிக் ஆகிய வீரர்கள் ஒரே நாளில் அடுத்தடுத்து கொரோனா வைரசினால் உயிரிழந்தனர்.

 • Share this:
  ரவீந்திரபால் சிங் வயது 60. இவர் லக்னோவில் இருந்தா, மற்றொவு வீரர் கவுஷிக் வயது 66. இருவரும் மருத்துவமனையில் வெண்ட்டிலேட்டரில் இருந்தனர்.

  1998 ஆசியப் போட்டிகளில் கவுஷிக் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக இருந்தார். தோஹாவில் 2006-ல் நடைபெற்ற ஆசியப் போட்டிகளிலும் மகளிர் அணி வெண்கலம் வென்ற போது கவுஷிக்தான் பயிற்சியாளர்.

  ரவீந்திரபால் சிங் 1984-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கிலும் இந்திய அணிக்காக ஆடினார். தொடர்ந்து முதுகு வலியினால் அவதிப்பட்ட நிலையில் ஹாக்கியிலிருந்து ஓய்வு அறிவித்தார்.

  மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரன் ரிஜுஜு தன் அஞ்சலிக் குறிப்பில், “இந்திய விளையாட்டுத் துறைக்கு இவர்களது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரத்தக்கது” என்று கூறியுள்ளார்.

  சனிக்கிழமையன்று இவர்கள் இரவு அடுத்தடுத்து மரணமடைந்தது விளையாட்டு உலகத்தை சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

  கவுஷிக் 3 வாரங்கள் கொரோனாவுடன் போராடி டெல்லியில் காலமானார்.  மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஹாக்கி தங்கம் வென்றதில் கவுஷிக் பங்கு பெரியது. அதுவும் 3 கோல்களை அடித்தர், இதில் ஒன்று இறுதிப்போட்டியில் ஆடிய ஸ்பெயினுக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.

  ரவீந்திர பால் சிங் மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் பங்களித்தது பற்றி வீரர்கள் நினைவு கூர்ந்துள்ளனர், மிகப்பிரமாதமான மிட் ஃபீல்டர் என்கின்றனர்.  இவர் 2 வாரங்கள் லக்னோவில் கொரோனாவுடன் போராடி கடைசியில் உயிரிழந்தார்.  1980 ஒலிம்பிக் ஹாக்கி தங்கம் வென்ற இந்திய அணியின் கேப்டன் பாஸ்கரன், ரவீந்திர பால் சிங் பற்றி கூறும்போது, “அஜித் பால் சிங் என்ற மிகப்பெரிய செண்டர் ஹாஃப் நிலையில் ஆடிய வீரரின் இடத்தில் ரவீந்திர பால் ஆடினார், அது அவருக்கு பெரிய அழுத்தம்தான் ஆனாலும் அஜித் பால் சிங் பெயரைக் காப்பற்றும் விதமாக ஆடினார் ரவீந்திரபால் சிங் என்றார்.

  அந்த அணியின் இன்னொரு முன்னாள் வீரர் ஜஃபர் இக்பால் ரவீந்திரபால் நல்ல ப்ளேயர் என்றதோடு கடைசி வரை திருமணம் செய்துகொள்ளாமல் தனியராகவே இருந்து விட்டார் என்றார்.

  இன்று கவுஷிக், ரவீந்திரபால் சிங் நம்மிடையே இல்லை. ஒலிம்பிக் தங்கம் வென்ற அணி வீரர்கள் இருவரையும் கொரொனா கொண்டு சென்று விட்டது ஹாக்கி உலகை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
  Published by:Muthukumar
  First published: