Copa America Football: இதுதான் தென் அமெரிக்க கால்பந்து! நடன அமைப்பு போன்ற மூவ்- ஈக்வடாரை வீழ்த்தி பழிதீர்த்த கொலம்பியா

நடன அமைப்பு போல் மூவ் அமைத்து கோல் அடித்த மூவர் கூட்டனி. கொலம்பியா.

கோப்பா அமெரிக்கா 2021 கால்பந்து தொடரின் பிரிவு பி போட்டியில் ஈக்வடார் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி வெற்றி பெற்றது.

  • Share this:
ஐரோப்பா போன்று அல்லாமல் கால்பந்து என்பது தென் அமெரிக்காவின் அடையாளம் மற்றும் பண்பாடுடன் இணைந்தது. தென் அமெரிக்க நாடுகளான அர்ஜெண்டினா, பிரேசில், கொலம்பியா, பெரூ, வெனிசூலா, பராகுவா, சிலி உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளின் கால்பந்து ஒரு ஓபன் ஸ்டைல் ஆட்டம். சுதந்திர நடனம் போல் இருக்கும். மாறாக ஐரோப்பியக் கால்பந்து ஒரு திட்டமிட்ட நகர்வில் கட்டுக்கோப்புடன் இருக்கும் தனிநபர் கிரியேட்டிவிட்டிக்கு அதிக இடம் கிடையாது.

மாறாக தென் அமெரிக்கக் கால்பந்தாட்டத்தில் தனிமனித கற்பனை மற்றும் படைப்பூக்கத் திறன் அணியின் திறனுடன் இசைவு கொள்ளும் போது சிலபல மூவ்கள் நடன அமைப்பு போலவேதான் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் தென் அமெரிக்க நாட்டு வீரர்கள் பலர் ஐரோப்பிய கிளப்புகளுக்கு ஆடுவதால் அவர்களின் படைப்பூக்க கால்பந்தாட்டம், உள்ளுணர்வின் நடன அசைவுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

Also Read: Copa America 2021: பிரேசில் அபார வெற்றி: வெனிசுலாவின் 8 வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பின்னடைவு

இந்நிலையில் இன்று இந்திய நேரப்படி அதிகாலை நடைபெற்ற கோப்பா அமெரிக்கா 2021 கால்பந்து தொடரில் கொலம்பியா அடித்த வெற்றிக்கான ஒரே கோல் அமைந்த விதம் பிரமாதமாக இருந்தது. 42வது நிமிடத்தில் ஈக்வடாரிய கோல் பாக்ஸுக்கு சற்று வெளியே கொலம்பியா வீரர் எட்வின் கார்டோனா ஒரு ஃப்ரீகிக்கை அடித்தார். நேரடியாக கோலுக்க்கு ஷூட் செய்யாமல் யுவான் கில்லர்மோ, குவாத்ராதோ, மிகுவெல் போர்ஜா ஆகியோருடன் 3 ஷார்ட் பாஸ்களை மேற்கொண்டனர்.

பந்து போர்ஜாவிடம் வர அவர் தலையால் கார்டோனாவிடம் அடித்தார். அவர் ஏற்கெனவே கோல் கீப்பர் பெட்ரோ ஆரிட்ஸ் நோக்கி வந்தார், போர்ஜாவிடமிருந்து வந்த பந்தை வலது காலால் கோலுக்குள் திணித்தார். ஈக்வடாரின் தடுப்பாட்ட வீரர்கள்,  கொலம்பியாவின் எந்த வீரர்  கோல் நோக்கி ஷூட் செய்யப்போகிறார்கள் என்பதில் குழப்பமடைந்தனர். இதுதான் தென் அமெரிக்கக் கால்பந்தின் அழகு. கோல் அருகே வந்து விட்டால் ஷூட் ஷூட் என்று கோச்கள் கத்துவார்கள், ஆனால் கொலம்பியா வீரர்கள் கோல் மவுத்தில் அருமையான, நடன அமைப்பு போன்ற மூவை மேற்கொண்டு சாவதானமாக கோலை அடித்தனர். யார் கோல் நோக்கி அடிக்கப் போகிறார்கள் என்பது ஈக்வடார் கோல்கீப்பருக்குமே தெரியாமல் அடிக்கும் மூவ் ஆகும். இப்படிப்பட்ட ஒரு அபாரமான கோலில் தான் ஈக்வடாரை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது கொலம்பியா

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்பு பிரேசில் அணியில் ரொனால்டோ, ரிவால்டோ, ரொனால்டீனியோ இப்படித்தான் எதிரணியின் கோல் அருகே ஷார்ட் பாஸ்களை ஆடி குழப்பி விட்டு யார் கோல் அடிப்பார்கள் என்ற குழப்பத்தை உருவாக்கி கோல் அடிப்பார்கள். இதுதான் தென் அமெரிக்கக் கால்பந்தின் சாராம்சம்.

Also Read: Euro 2020 | யூரோ கோப்பையின் ஆகச்சிறந்த போட்டி: இடைவேளைக்குப் பிறகு 5 கோல்கள்; அதிவேக கால்பந்தில் உக்ரைனை 3-2 என்று வீழ்த்தியது நெதர்லாந்து

7 மாதங்களுக்கு முன்பாக உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் ஈக்வடார் அணி கொலம்பியாவை 6-1 என்ற கோல் கணக்கில் நொறுக்கியது. இதனையடுத்து பயிற்சியாளர் கார்லோஸ் குயிரோஸ் வெளியேற்றப்பட்டார். இப்போது ரெய்னால்டோ ருயீடா கோச்சாக இருக்கிறார். ஆனால் இவரும் சர்ச்சைக்குரியவரானார், ஏனெனில் நட்சத்திர கொலம்பிய மிட் ஃபீல்டர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸை கோப்பா அமெரிக்கா அணியிலிருந்து அவர் நீக்கியது பெரும் விமர்சனங்களுக்குள்ளானது.

இதனையடுத்து பிரிவு பி-யில் பிரேசில் வெனிசுலாவை 3-0 என்று வீழ்த்த கொலம்பியா ஈக்வடாரை 1-0 என்று வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 2 இடங்களில் உள்ளனர்.

வரும் வியாழனன்று கொலம்பியா அணி வெனிசுலாவை சந்திக்கிறது.
Published by:Muthukumar
First published: