Copa America 2021: பிரேசில் அபார வெற்றி: வெனிசுலாவின் 8 வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பின்னடைவு

பந்தை எடுத்துச் செல்லும் நெய்மார்.

தென் அமெரிக்கக் கால்பந்து தொடரான கோப்பா அமெரிக்கா இன்று அதிகாலை பிரேசில்-வெனிசுலா அணிகளுக்கு இடையிலான போட்டி மூலம் தொடங்கியது, இதில் பிரேசில் முழு ஆதிக்கம் செலுத்தி 3-0 என்ற கோல் கணக்கில் வெனிசுலா அணியை வீழ்த்தியது.

  • Share this:
    பிரேசிலியாவில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் பிரேசில் அணியில் மார்கின்ஹோஸ் 23வது நிமிடத்திலும் நெய்மார் ஜூனியர் 64வது நிமிடத்தில் பெனால்டி கோலும், பிறகு நெய்மாரின் அபார உதவியுடன் கேப்ரியல் பார்போஸா 3வது கோலையும் அடித்தனர்.

    வெனிசுலா அணியில் முக்கிய வீரர்கள் கோவிட்-19 பாசிட்டிவினால் ஆட முடியாமல் போக அந்த அணி பின்னடைவு கண்டது. 22வது நிமிடத்தில் வெனிசுலா வீரர் பெர்னாண்டோ பந்தை பிரேசில் கோல் பகுதியில் அடிக்க அங்கு மற்றொரு வெனிசுலா வீரர் யோகன் குமணா ஆஃப் சைடு ஆனதால் வாய்ப்பு தவற விடப்பட்டது.

    பிறகு பிரேசிலுக்கு ஒரு கார்னர் வாய்ப்பு கிடைத்தது அதை ரிக்கார்லிசன் தலையால் முட்டி கோலுக்குள் தள்ளும் முயற்சி தோல்வி கண்டது. நெய்மார் ஷாட்தான் இந்த வாய்ப்புக்கும் காரணம். மீண்டும் ஒரு கார்னர் வாய்ப்பு கிடைக்க ஷாட் அடிக்கப்பட்டு வந்த பந்தை மார்கின்ஹோஸ் ஆட முயல வெனிசுல வீரர் அவருக்கு அருகே நின்று இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட கடைசியில் மார்கின்ஹோஸின் பின் குதிகாலில் பட்டு பந்து கோலுக்குள் சென்றது, கோல் கீப்பர் முழுதும் மறைக்கப்பட்டதால் அவர் கவனிக்கவில்லை.

    நெய்மாரின் 67வது கோல்.


    தொடர்ந்து பிரேசில் அணி தாக்குதல் தொடுத்தது, கேப்ரியல் ஜெசூஸ் மற்றும் நெய்மார் மின்னல் வேகத்தில் ஆடினர். ஆனால் பல ஷாட்கள் இலக்கு தவறின, சிலவற்றை வெனிசுலா தடுப்பு வீரர்கள் அபார முயற்சியில் தடுத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இடைவேளைக்குப் பிறகும் பிரேசில் ஆதிக்கம் தொடர 64வது நிமிடத்தில் வலது புறம் பிரேசில் பந்தை விறுவிறுவென வெனிசுலா பகுதிக்குள் கொண்டு செல்ல வலது புறம் கோல் அடித்தி விடும் அச்சத்தில் வெனிசுலா வீரர் டேனிலோ பிரேசில் வீரரை கீழே தள்ள பிரேசிலுக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது, அதை நெய்மார் கோலாக மாற்ற பிரேசில் 2-0 என்று முன்னிலை வகித்தது. நெய்மாரின் 67வது கோலாகும் இது. பிறகு 89வது நிமிடத்தில் நெய்மார் ஜூனியர் அபாரமான ஒரு கிராஸ் ஷாட்டை ஆட அதனை கேப்ரியல் பர்போஸா மார்பினால் தள்ளி 3வது கோலை அடித்தார்.

    வெனிசுலா அணியில் 8 வீரர்கள் கொரோனா பாசிட்டிவினால் வெளியேற முற்றிலும் வேறு 15 வீரர்களை கடைசி நேரத்தில் களமிறக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு வெனிசுலா தள்ளப்பட்டது. வெனிசுலா பிரேசிலை வீழ்த்தியதில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், தைரியமாக ஆடினர்.

    பிரேசிலின் ரிகார்லிசன் அரை வாய்ப்பு, முழு வாய்ப்புகளை தவற விட்டார், பிரேசிலின் பெரிய சாதகம் என்னவெனில் பாஸ்களின் துல்லியம். 7 ஷாட்களை இலக்கை நோக்கி அடித்தது பிரேசில். அதே போல் பந்தை அதிகம் தங்கள் வசம் வைத்திருந்ததிலும் பிரேசில்தான் முன்னிலை வகித்தது.

    அடுத்ததாக பெரூ அணியை 17ம் தேதி சந்திக்கிறது பிரேசில், அதே தினத்தில் வெனிசுலா, கொலம்பியாவைச் சந்திக்கிறது.
    Published by:Muthukumar
    First published: