முகப்பு /செய்தி /விளையாட்டு / Copa America 2021 | கொலம்பியாவை வீழ்த்தி இறுதியில் அர்ஜெண்டீனா: ஹீரோவான கோல் கீப்பர் எமி மார்ட்டினேஸ்- பெனால்டியில் 3 கோல்களைத் தடுத்தார்

Copa America 2021 | கொலம்பியாவை வீழ்த்தி இறுதியில் அர்ஜெண்டீனா: ஹீரோவான கோல் கீப்பர் எமி மார்ட்டினேஸ்- பெனால்டியில் 3 கோல்களைத் தடுத்தார்

கொலம்பியாவை வீழ்த்தி கோப்பா அமெரிக்கா இறுதியில் அர்ஜெண்டீனா.

கொலம்பியாவை வீழ்த்தி கோப்பா அமெரிக்கா இறுதியில் அர்ஜெண்டீனா.

பிரெசிலியாவில் நடைபெற்ற கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரின்  2ம் அரையிறுதிப் போட்டி 1-1 என்று முழு நேர ஆட்டத்தில் டிரா ஆக பெனால்டி ஷூட் அவுட்டில் அர்ஜெண்டினா 3-2 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

பிரெசிலியாவில் நடைபெற்ற கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரின்  2ம் அரையிறுதிப் போட்டி 1-1 என்று முழு நேர ஆட்டத்தில் டிரா ஆக பெனால்டி ஷூட் அவுட்டில் அர்ஜெண்டினா 3-2 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இறுதியில் அனைவரும் எதிர்பார்த்த பிரேசில்- அர்ஜெண்டீனா மோதல் ரசிகர்களின் விருந்துக்கு காத்திருக்கிறது.

இன்று நடந்த அரையிறுதியில் கூடுதல் நேரம் கிடையாது, காரணம் கோப்பா அமெரிக்கா விதிமுறைகளின் படி இறுதிப் போட்டி சமன் ஆனால் மட்டுமே கூடுதல் 30 நிமிடம் அளிக்கப்படும், எனவே இந்தப் போட்டி 90 நிமிட முழு நேர ஆட்டம் இருதரப்புக்கும் சமமாக 1-1 என்று முடிய ஆட்டம் நேரடியாக பெனால்டி ஷூட் அவுட்டுக்குச் சென்றது.

இதில் அர்ஜெண்டீனா கோல் கீப்பர் எமி மார்ட்டினேஸ் கொலம்பியாவின் 3 பெனால்டி கிக்குகளை வலது புறம் பாய்ந்து தடுத்து ஹீரோவானார். அவர் வலது புறம் வலுவான கோல் கீப்பர் என்று தெரிந்தும் கொலம்பியாவின் சான்சேஸ், எரி மினா, எட்வின் கார்டோனா ஆகியோர் ஷாட்களை பாய்ந்து தடுத்தார்.

ஆட்டம் தொடங்கி 4ம் நிமிடத்திலேயே மெஸ்ஸி பாய்சல் நிகழ்த்தினார் ஆனால் இவர் ஒன்றிரண்டு கொலம்பிய தடுப்பு வீரர்களுக்குப் போக்குக் காட்டி அருமையாக லாவ்தரோ மார்ட்டினேசுக்கு தூக்கி விட அதை அவர் தலையால் முட்ட கோலுக்கு அருகில் வெளியே சென்றது.

7வது நிமிடத்தில் அர்ஜெண்டீனாவின் முதல் கோல், மெஸ்ஸி அசிஸ்ட்:

ஆனால் இந்த நிம்மதி கொலம்பியாவுக்கு நீடிக்கவில்லை அடுத 3 நிமிடங்களில் கியோவானி லோ செல்சோ அருமையாக பந்தை எடுத்து வந்து மெஸ்ஸியிடம் அளிக்க அவர் அதை அருமையாகக் கட்டுப்படுத்தி லாவ்தரோவுக்கு மீண்டும் பந்தை பாஸ் செய்ய கொலம்பியா கோல் பாக்ஸ்க்கு அருகில் இருந்த லாவ்தரோ மார்ட்டினேஸ் வலது காலால் உதைக்க பந்து வலது மூலையில் கோல் வலையைத் தாக்க அர்ஜெண்டினா 1-0 என்று முன்னிலை

மெஸ்ஸி. | கோப்புப் படம்.

ஆனால் 8வது நிமிடத்தில் கொலம்பியா சமன் செய்திருக்கும். கொலம்பியாவின் எதிர்த்தாக்குதலில் அந்த அணியின் வீரர் குவாத்ராதோ இடது காலால் உதைத்த முயற்சி சேவ் செய்யப்பட்டது, கொலம்பியாவின் லூயி டியஸ் அடித்த கிராஸ் ஆகும் இது. ஆட்டத்தின் 20-35 நிமிடங்கள் வரை கொலம்பியாவின் ஆதிக்கம் அதிகமிருந்தது, அர்ஜெண்டீனா நெருக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

27வது நிமிடத்தில் அபாயகரமான பகுதியில் கொலம்பியாவுக்கு ஃப்ரீ கிக் கிடைத்தது. குவாத்ராதோவின் ஷாட் கோல் போஸ்டுக்கு மேலே சென்றது.

37வது நிமிடத்தில் ஏறக்குறைய அர்ஜெண்டீனா கோல் வாங்கியிருக்கும். கொலம்பியா இருமுறை கோல் போஸ்ட்டில் அடித்து விரயம் செய்தது. ஆனால் ஆட்டத்தின் போக்கிற்கு எதிராக 44வது நிமிடத்தில் மெஸ்ஸியின் கார்னர் ஷாட்டில் கொன்சாலேஸ் கொஞ்சம் இடம் கிடைக்க தலையால் முட்டிய ஷாட் நேராக கொலம்பியா கோல் கீப்பர் ஆஸ்பினா கைக்குச் சென்றது. இடைவேளையின் போது அர்ஜெண்டினா 1-0 முன்னிலை.

கொலம்பியா சமன் கோல்:

இடைவேளைக்குப் பிறகு கொலம்பியா அணி 3 புதிய வீரர்களைக் களமிறக்கியுள்ளது. பிராங்க் ஃபாப்ரா, இம்மி சாரா, எட்வின் கார்டோனா ஆகியோர் இறக்கப்பட்டனர், இதில் ஃபாப்ரா, எட்வின் கார்டோனா அர்ஜெண்டீனாவுக்கு கடும் தொல்லைகள் கொடுத்தனர். ஃபாப்ராவின் ஷாட்டை எமி மார்ட்டினேஸ் தடுத்தார்.

இப்படியே போய்க்கொண்டிருந்த ஆட்டத்தின் 60வது நிமிடத்தில் சபட்டாவுக்குப் பதில் போஜ்ரா கொலம்பியாவுக்காகக் களமிறங்கினர்.

கொலம்பியாவின் கொல். டியஸ் அடித்த பந்து கோல் வலைக்குள்.

61வது நிமிடத்தில் கொலம்பியாவின் பகுதியிலிருந்து ஒரு ஷாட் நேராக எட்வின் கார்டோனாவுக்கு வர அர்ஜெண்டீனாவின் தடுப்பு வீரர்கள் அங்கு இல்லாமல் போக அவர் விறுவிறுவென எடுத்து வந்து அபாய வீரர் லூயிஸ் டயஸ் பந்தைக் கொண்டு வருவதற்குள் அர்ஜெண்டீனா தடுப்பு வீரர்கள் கோலுக்கு அருகே குவிந்தனர், ஆனால் கோலுக்கு இடது புறத்திலிருந்து ஒரு கடினமான கோணத்திலிருந்து டியஸ் பந்தை கோலுக்குள் திணித்தார், பிரமாதமான கோல், கடினமான கோல். 1-1 என்று சமன் ஆனது.

அர்ஜெண்டினா தவற விட்ட பெரிய வாய்ப்பு, கோல் கீப்பர் ஆஸ்பினா இல்லாமல் காலியாக இருந்த கோல் வலை

72வது நிமிடத்தில் அர்ஜெண்டீனாவின் எதிர்த்தாக்குதலில் அருமையான கோல் வாய்ப்பு தவற விடப்பட்டது. கோல் ஒபனாக இருக்கிறது, முனோஸ் அதனை கோலுக்குள் தூக்கி விட்டிருந்தால் போதும் ஆனால் அவர் டி மரியாவுக்கு பாஸ் செய்ய அவர் ஆஸ்பினாவைச் சுற்றி வந்து லாவ்தரோவுக்கு அளிக்க அவரது ஷாட் தடுக்கப்பட்டது. அதாவது கோல் கீப்பர் இல்லாமல் அங்கு நின்றிருந்த மற்றொரு கொலம்பிய வீரர் அதைத் தடுத்தார், ஓபன் கோல் கோட்டை விடப்பட்டது, ஆனால் ரீபவுண்ட் ஆன பந்தை ஆஞ்செல் டி மரியா தூக்கி வெளியே அடித்தார், இது மிக அருமையான வாய்ப்பு. எப்படி இதைக் கோட்டை விட்டார்கள் என்று தெரியவில்லை.

பிறகு மெஸ்ஸி இரு ஃப்ரீ கிக்குகளை அடித்தார் இரண்டும் கொலம்பியாவின் சுவரில் பட்டு திரும்பியது. 80வது நிமிடத்தில் டி மரியா அருமையாக பந்தை கொலம்பியா வீரர்களுக்குப் போக்குக் காட்டி எடுத்து வந்து மெஸ்ஸியிடம் அளிக்க மெஸ்ஸியின் இடது கால் ஷாட் போஸ்ட்டைத் தாக்கியது.

கடைசியில் எந்த முயற்சியும் பயனளிக்காமல் ஒரே ஃபவுல் குழப்பங்களுடன் 1-1 என்ற ட்ராவில் முடிந்தது. ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டுக்குச் சென்றது.

அதில் கொலம்பியாவின் சான்சேஸ், எரி மினா, எட்வின் கார்டோனா ஆகியோர் ஷாட்களை பாய்ந்து அர்ஜெண்டீனா கோல் கீப்பர் தடுக்க அர்ஜெண்டீனா பெனால்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்று இறுதியில் பிரேசிலைச் சந்திக்கிறது.

First published:

Tags: Argentina, Brazil, Columbia, Football