முகப்பு /செய்தி /விளையாட்டு / Copa America 2021 | கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடர்: அணிகள், இந்திய நேரப்படி போட்டி அட்டவணை- எந்தத் தொலைக்காட்சியில் லைவ்?

Copa America 2021 | கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடர்: அணிகள், இந்திய நேரப்படி போட்டி அட்டவணை- எந்தத் தொலைக்காட்சியில் லைவ்?

கோப்பா அமெரிக்கா கால்பந்து தொட்ர் 2021, பிரேசில்.

கோப்பா அமெரிக்கா கால்பந்து தொட்ர் 2021, பிரேசில்.

Copa America 2021 கால்பந்து தொடர்: அணிகள், இந்திய நேரப்படி போட்டி அட்டவணை- எந்தத் தொலைக்காட்சியில் லைவ்? ஆகியவை பற்றிய முழு விவரங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

  • Last Updated :

இந்த மாதம் இரண்டு மாபெரும் கால்பந்து திருவிழாக்கள் நடைபெறுகிறது, ஒருபுறம் யூரோ 2020 போட்டிகள் ஜூன் 11 தொடங்குகிறது, ஜூன் 14ம் தேதியில் பிரேசிலில் கோப்பா அமெரிக்கா என்ற பெரும் லத்தீன் அமெரிக்க அல்லது தென் அமெரிக்கக் கால்பந்து திருவிழா தொடங்குகிறது.

எந்த தொலைக்காட்சியில் லைவ்?

இந்த அபாரமான கால்பந்து தொடர் ஆங்கிலம் தவிர 4 இந்திய மொழிகளில் நேரலையாக ஒளிபரப்பப் படுகிறது. அதாவது தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி மொழிகலில் நேரலையாக ஒளிபரப்படுகிறது.  சோனி டென் மற்றும் சோனி சிக்ஸ் தொலைக்காட்சிகளில் இந்த ஆட்டங்களின் நேரலையைக் காணலாம். சோனிலைவிலும் நேரலை ஒளிபரப்பாகும்.

ஒருபுறம் யூரோ கோப்பை 2020-ல் நடக்க வேண்டியது இந்த ஆண்டு நடக்கிறது, அதே போல் கோவிட்19 அலையினால் ஒத்தி வைக்கப்பட்ட தென் அமெரிக்க கோப்பா அமெரிக்கா கால்பந்து கோப்பை தொடரும் இப்போது நடைபெறுகிறது.

Also Read:  Euro 2020 | யூரோ 2020: குரூப் ஆஃப் டெத்- பிரான்ஸ், ஜெர்மனி, போர்ச்சுகல்- பிரிவு எஃப் ஒரு பார்வை

சர்ச்சைக்குரிய விதத்தில் கடைசி நேரத்தில் பிரேசிலுக்கு இந்தப் போட்டித் தொடர் மாற்றப்பட்டுள்ளது. அதுவும் பிரேசிலில் கொரோனா தொற்று முடிந்தபாடில்லை. அங்கு கடந்த புதனன்று கூட நாளொன்றுக்கு 1 லட்சம் கொரோனா தொற்றும் 2500 கொரோனா மரணங்களும் ஏற்பட்டுள்ளன.

இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன, இவை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப் ஏ: அர்ஜெண்டினா, உருகுவே, பராகுவே, சிலி, பொலிவியா

குரூப் பி: பிரேசில், வெனிசூலா, பெரூ, கொலம்பியா, ஈக்வடார்.

முதல் போட்டியில் பிரிவு பி அணிகளான பிரேசில், வெனிசூலா அணிகள் மோதுகின்றன, இந்தப் போட்டி பிரேசிலியாவில் ஜூன் 14ம் தேதி நடைபெறுகிறது. இறுதிப் போட்டி ஜூலை 11ம் தேதி ரியோ டி ஜெனிரீயோவில் உள்ள மர்கனாவில் நடைபெறுகிறது. ரியோவில் 2 ஸ்டேடியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மற்றும் கொயானியா, குயாபா ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போட்டி அட்டவணை: இந்திய நேரப்படி ஆட்டம்- குரூப் ஸ்டேஜ்

Monday, June 14: Brazil vs Venezuela - 2:30 AM IST

Monday, June 14: Colombia vs Ecuador - 5:30 AM IST

Tuesday, June 15: Argentina vs Chile - 2:30 AM IST

Tuesday, June 15: Paraguay vs Bolivia - 5:30 AM IST

Friday, June 18: Colombia vs Venezuela - 2:30 AM IST

Friday, June 18: Peru vs Brazil - 5:30 AM IST

Saturday, June 19: Chile vs Bolivia - 2:30 AM IST

Saturday, June 19: Argentina vs Uruguay - 5:30 AM IST

Monday, June 21: Venezuela vs Ecuador - 2:30 AM IST

Monday, June 21: Colombia vs Peru - 5:30 AM IST

Tuesday, June 22: Uruguay vs Chile - 2:30 AM IST

Tuesday, June 22: Argentina vs Paraguay - 5:30 AM IST

Thursday, June 24: Ecuador vs Peru - 2:30 AM IST

Thursday, June 24: Colombia vs Brazil - 5:30 AM IST

Friday, June 25: Bolivia vs Uruguay - 2:30 AM IST

Friday, June 25: Chile vs Paraguay - 5:30 AM IST

Monday, June 28: Brazil vs Ecuador - 2:30 AM IST

Monday, June 28: Venezuela vs Peru - 2:30 AM IST

Tuesday, June 29: Uruguay vs Paraguay - 5:30 AM IST

Tuesday, June 29: Bolivia vs Argentina - 5:30 AM IST

காலிறுதிப் போட்டிகள் ஜூலை 3 முதல் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஜூலை 6 மற்றும் ஜூலை 7ம் தேதிகளில் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறுகிறது.

top videos

    இறுதிப் போட்டி ஜூலை 11.

    First published:

    Tags: Argentina, Brazil, Football