Copa America 2021 : லியோனல் மெஸ்ஸியின் அபார ஃப்ரீ கிக் கோல், பெனால்டி தடுக்கப்பட்டும் அடித்த சிலியின் கோல்- அர்ஜெண்டீனா-சிலி ட்ரா

மெஸ்ஸி.

ரியோ டி ஜெனிரியோவில் இன்று இந்திய நேரப்படி அதிகாலை நடந்த கோப்பா அமெரிக்கா தென் அமெரிக்கக் கால்பந்து தொடரின் பிரிவு ஏ போட்டியில் அர்ஜெண்டீனா, சிலி அணிகள் மோதின, இரு அணிகளும் தலா 1 கோல் அடிக்க ஆட்டம் 1-1 என்று டிரா ஆனது..

 • Share this:
  ஃப்ரீ கிக்கை கோலாக மாற்றுவதில் புகழ்பெற்ற லியோனல் மெஸ்ஸி முதல் பாதி ஆட்டத்தில் 25 அடியிலிருந்து கிடைத்த ஃப்ரீ கிக்கை அபாரமாக வலையில் வலது மேல் மூலைக்குள் திணித்தார், சிலி வீரர்கள், கோல் கீப்பர் அதன் அழகை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. அர்ஜெண்டீனா 1-0 என்று முன்னிலை வகித்தது.

  ஆனால் இரண்டாவது பாதியில் அர்ஜெண்டீனா பெனால்டி பகுதியில் ஃபவுல் செய்ய வீடியோ ரெஃபரல் மூலம் சரிபார்க்கப்பட்டு சிலி அணிக்குச் சாதகமாக பெனால்டி கொடுக்கப்பட்டது. அப்போது எட்வர்டோ வர்காஸ் கோல் அடிக்க ஆட்டம் டிரா ஆனது.

  ஆட்டம் தொடங்கியது முதல் அர்ஜெண்டீனா அணி ஆதிக்கம் செலுத்தியது முன்கள வீரர்கள் மார்ட்டினேஸ், நிகோலஸ் கொன்சாலேஸ் கோல் வாய்ப்புகளை தவற விட்டனர். அதுவும் கொன்சாலேஸ் சிலி கோல் கீப்பர் கிளாடியோ பிராவுவுடன் ஒன் டு ஒன் நேராக இருந்த ஒரு வாய்ப்பை அவரிடமே நேராக அடித்து வீணடித்தார்.

  ALSO READ: Euro 2020: நடு மைதானத்திலிருந்து செக். வீரர் பாட்ரிக் ஷிக் அடித்த நம்ப முடியாத கோல்; வாய்ப்புகளை வீணடித்த ஸ்காட்லாந்து- செக்.குடியரசு அபார வெற்றி

  ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் 25 அடியில் சிலி வீரர் அர்ஜெண்டீனா வீரரை இடித்துக் கீழே தள்ள சிலி கோலிலிருந்து நேராக 25 அடியில் ஃப்ரீ கிக் அர்ஜெண்டீனா சார்பாக வழங்கப்பட்டது. வழக்கம் போல் மெஸ்ஸி ஃப்ரீ கிக்கை அடிக்க தயாரானார். சிலி வீரர்கள் சுவர் போல் நின்றனர். ஆனால் எந்த சுவரையும் உடைக்கும் மெஸ்ஸி சுவருக்கு மேல் பந்தைத் தூக்கி விட அது மிக அழகாக வளைந்து சென்று கோலின் வலது மேல் மூலையில் வலையில் மோதி கதறியது. மெஸ்ஸியின் அபாரமான கோல்.

  மெஸ்ஸியின் ஃப்ரீ கிக் கோலுக்குள் செல்லும் காட்சி. | கோப்பா அமெரிக்கா


  Also Read: Copa America 2021 கால்பந்து: மெஸ்ஸியைத் தூக்கி சாப்பிடும் 5 வீரர்கள் யார்?

  அர்ஜெண்டீனா 1-0 என்று முன்னிலை பெற்றது. ஆட்டம் முடியும் வரை மெஸ்ஸி தொடர்ந்து வாய்ப்புகளை உருவாக்கித் தந்தபடியே இருந்தார். ஆனால் மெஸ்ஸியின் சக வீரர்கள் அவருக்கு ஒத்துழைக்கவில்லை, உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் கொலம்பியாவுக்கு எதிராக 2-2 என்று டிரா செய்ததில் கிடைத்த ஒத்துழைப்பு மெஸ்ஸிக்கு இந்தப் போட்டியில் கிடைக்கவில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இரண்டாவது பாதி தொடங்கி 13வது நிமிடத்தில் பெனால்டி பகுதிக்கு சிலி பந்தை விறுவிறுவென கொண்டு சென்று ஷூட் செய்த போது அர்ஜெண்டீனா வீரர் வேறு வழியின்றி குறுக்காகக் காலை விட சிலி வீரர் கீழே தள்ளப்பட்டார், இதனை வீடியோ மூலம் ரெஃபர் செய்த நடுவர் பெனால்டி கிக்கை சிலிக்கு சாதகமாக்கினார். அது மிகப்பெரிய ஃபவுல்தான்.

  சிலி வீரர் ஆர்துரோ வைடால் பெனால்டி கிக்கை அடித்தார். ஆனால் அர்ஜெண்டினா கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினேஸ் அதனை தன் விரலால் தட்டி விட பந்து கோல் போஸ்ட்டின் மேல் கம்பியில் பட்டு திரும்பி வந்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திய எட்வர்டோ வர்காஸ் முன்னால் பாய்ந்து தலையால் முட்டி கோலாக மாற்ற சமன் ஆனது.

  கடைசியில் அர்ஜெண்டினா வெற்றிக்காக மோதியது, ஆனால் சிலி தடுப்பு வீரர்கள் அர்ஜெண்டினாவின் வெற்றி முயற்சியை முறியடித்தனர்.
  Published by:Muthukumar
  First published: