Copa America 2021 | கோப்பா அமெரிக்கா இறுதியில் பிரேசில்: 3 தடுப்பாட்ட வீரர்களுக்கு ஆட்டம் காட்டிய நெய்மார்; பெரூவை 1-0 என்று வீழ்த்தியது

கோப்பா அமெரிக்கா இறுதியில் பிரேசில்

கோப்பா அமெரிக்கா 2021 தென் அமெரிக்கக் கால்பந்து தொடரின் முதல் அரையிறுதியில் பெரூ அணியை பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

  • Share this:
    பிரேசில் அணிக்கு வெற்றி சுலபமாகக் கிடைக்கவில்லை. காரணம் பெரூ கோல் கீப்பர் கோல் முயற்சிகளை வெற்றிகரமாகத் தடுத்து வந்தார்.  இடைவேளைக்கு முன் லூகாச் பக்கெட்டா அடித்த கோல் மூலம் பிரேசில் வென்றது.

    முதல் 30 நிமிடங்களில் இரு அணிகளுக்கும் கோல் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மாரின் அட்டகாசமான ட்ரிபிளிங் திறமையினால் பெரூவின் 3 தடுப்பு வீரர்களுக்கு ஆட்டம் காட்டினார். பிறகு அவர்களுக்கு போக்குக் காட்டி பந்தை அழகாகப் பாஸ் செய்ய அங்கு லூகாச் பக்கெட்டா கோலாக மாற்றினார்.

    கோப்பா அமெரிக்கா போட்டியில் உள்நாட்டில் தோற்காத பிரேசில் இந்த கோப்பா அமெரிக்கா தொடரில் ஒருபோட்டி தவிர அனைத்தையும் வென்று கடைசியில் இறுதியிலும் வெல்ல காத்திருக்கிறது. இன்னொரு அரையிறுதியில் அர்ஜெண்டினா-கொலம்பியா அணிகள் நாளை மோதுகிறது.

    இரண்டாவது பாதியில் ஆட்டம் தொடங்கியவுடன் பெரூ அணிக்கு அருமையான வாய்ப்பு கிட்டியது. பெரூ வீரர் கியான்லுகா லபாடுலா அடித்த ஷாட்டை பிரேசில் கோல் கீப்பர் எடர்சன் கோலாகாமல் தள்ளி விட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தொடக்கத்தில் பிரேசில் பிரமாதமாக பெரூவை நெருக்கியது. பெரூ கோல் கீப்பர் பெட்ரோ காலீஸ் 3 கோல் நோக்கிய ஷாட்களைத் தடுத்தார். இந்த ஷாட்களை அடித்த பிரேசில் வீரர்கள் காஸ்மிரோ, நெய்மார், ரிகார்லிசன்.

    பிரேசில் இப்படி ஆடும்போதே தெரியும் கோல் விழுவதற்கு அதிக நேரம் எடுக்காது என்பது. 37வது நிமிடத்தில் நெய்மாருடன் இவர் இணைந்து கொண்டு சென்ற போது நெய்மார் சுமார் 4 பெரூ தடுப்பாட்ட வீரர்களுக்கு ஆட்டம் காட்டினார். இதனிடையே பக்கெட்டா கோல் அடிக்கும் நிலைக்க்குத் தயாரானார். பந்தை நெய்மார் அனுப்ப இடது காலால் ஒரே உதை முதல் கோல் பிரேசிலுக்கு முன்னிலை கொடுத்தது.

    இரண்டாவது பாதியில் பிரேசில் கோல் கீப்பர் எடர்சன் சில கோல் ஷாட்களைத் தடுத்தார், தள்ளிவிட்டார். பிரேசில் தற்போது 12 போட்டிகளில் தோற்காமல் ஆடி வருகிறது. ஈக்வடார் அணிக்கு எதிராக 1-1 என்று பிரேசில் ட்ரா செய்தது குறிப்பிடத்தக்கது.

    கோப்பையை கைப்பற்றினால் பிரேசில் 10வது முறையாக சாம்பியன் என்ற சாதனையை நிகழ்த்தும். 2 ஆண்டுகளுக்கு முன்பாக கோப்பா அமெரிக்கா இறுதியில் காயமடைந்த நெய்மார் இல்லாமலேயே பெரூவை 3- 1 என்று பிரேசில் வீழ்த்தி சாம்பியன் ஆனது.
    Published by:Muthukumar
    First published: