Copa America 2021 | நெய்மாரின் சாதனை கோல், ரொனால்டோவைக் கடந்தார்: பெரூவை 4-0 என்று ஊதிய பிரேசில்

4-0 என்று வென்ற பிரேசில் அணி. கோப்பா அமெரிக்கா 2021

ரியோ டி ஜெனிரியோவில் நடைபெற்ற கோப்பா அமெரிக்கா 2021 கால்பந்து தொடரில் பெரூ அணியை பிரேசில் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

  • Share this:
    வெனிசூலாவை 3- 0 என்று வீழ்த்திய பிரேசில் அணியிலிருந்து 6 வீரர்களை மாற்றினார் பயிற்சியாளர். நெய்மார் இதில் ஒரு கோலை அடித்து பிரேசில் கால்பந்தின் அனைத்து கால அதிக கோல்கள் அடித்த வீரர் ஆனார். பிரேசில் முன்னாள் நட்சத்திரம் ரொனால்டோவைக் கடந்தார்.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் 12வது நிமிடத்தில் சாண்ட்ரோஸ் முதல் கோலை அடிக்க, இடைவேளை வரை பெரூ அணி வசம் அதிகம் பந்துகள் இருந்தாலும் பாஸ்கள் பெரூ அணி அதிகம் மேற்கொண்டாலும் கோல் அடிக்க முடியவில்லை இதனால் இடைவேளையின் போது 1-0 என்று பிரேசில் முன்னிலை வகித்தது. இடைவேளைக்குப் பிறகு 3 கோல்களைத் திணித்தது.

    Also Read: Euro 2020| யூரோ கோப்பை: 99-வது விநாடியில் டென்மார்க் அடித்த சாதனை கோல் வீண்: டென்மார்க் ரசிகர்களின் இருதயத்தை நொறுக்கிய பெல்ஜியத்தின் வெற்றி

    கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் முதல் 2 போட்டிகளிலும் வென்ற அணி என்ற சாதனையையும் பிரேசில் நிகழ்த்தியது. குரூப் பி-யில் டாப் நிலையில் உள்ளது.

    எடர்சன், அலெக்ஸ் சாண்ட்ரோ, தியாகோ சில்வா, எவர்டன், கேப்ரியல் பார்போஸா ஆகியோரை ஆரம்பத்திலேயே இறக்கினார் பிரேசில் மேனேஜர். 12வது நிமிடத்தில் கேப்ரியல் ஜெசூஸ் கொடுத்த அருமையான பாஸை அலெக்ஸ் சாண்ட்ரோ கோலாக மாற்றினார். பாக்ஸின் நடுமையத்திலிருந்து வலது காலால் கோலின் மையப்பகுதிக்குள் திணித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடந்த கோப்பா அமெரிக்கா சாம்பியன்களான பிரேசில் அணியை அப்போது இறுதிப் போட்டியில் சந்தித்தது பெரூ அணிதான், ஆனால் 3-1 என்ற கோல் கணக்கில் தோற்றது பெரூ.

    பிரேசிலின் ஆட்டத்தின் துல்லியம், வேகம், உறுதியை பெரூ வீரர்களால் மேட்ச் செய்ய முடியவில்லை. மிட்ஃபீல்டில் பிரேசில் வீரர் ஃபாபின்யோ எப்போதும் அபாயகரமானவர், இவருடன் நெய்மாரும் சேர்ந்தால் எப்படி இருக்கும்?

    ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் பெரூ அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ரெனாட்டோ டாப்பியாவின் பாஸை பெரூ வீரர் கிறிஸ்டியன் ரேமோஸ் பாக்சின் மையத்திலிருந்து தலையால் முட்டினார், ஆனால் டாப் வலது மூலைக்குள் செல்லாமல் வெளியே சென்றது.

    இடைவேளைக்குப் பிறகு எவர்டன் ரிபைரோ பாஸை பிரேசிலின் ரிகார்லிசன் இடது புறத்திலிருந்து இடது காலால் கோலை நோக்கி அடித்த ஷாட் தடுக்கப்பட்டது. உடனேயே 52வது நிமிடத்தில் கேப்ரியல் ஜேசூஸ் வழங்கிய பந்தை பாக்ஸுக்கு வெளியேயிருந்து பிரேசில் வீரர் டேனியலோ அடித்தார் ஆனால் வலது புறம் கோலை அது தவற விட்டது. 59வது நிமிடத்தில் மோசமாக ஒர் ஃபவுலை கேப்ரியல் ஜெசூஸ் செய்ய மஞ்சள் அட்டைக் காட்டி எச்சரிக்கப்பட்டது.

    அதன் பிறகுதான் நெய்மாருக்கு வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பை வீடியோ அசிஸ்டண்ட் ரிவியூவைப் பார்த்து நடுவர் ரத்து செய்தார். ஆனால் நீண்ட நேரம் நெய்மாரைத் தடை செய்ய முடியவில்லை. ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் ஃபிரெட் கொடுத்த பந்தை நெய்மார் வலது காலால் கோலுக்குள் திணிக்க பிரேசில் 2-0 என்று முன்னிலை வகித்தது. 75வது நிமிடத்தில் டேனியலோ பந்தை எடுத்து வந்து நெய்மாரிடம் கொடுக்க நெய்மாரின் வலது கால் ஷாட் கோல் இலக்கை தவற விட்டது.

    81வது நிமிடத்திலும் நெய்மார் அடித்த ஷாட் கோல் கீப்பரால் தடுக்கப்பட்டது. 89வது நிமிடத்தில் ரிகார்லிசன் பந்தை வேகமாக எடுத்துச் சென்று எவர்டன் ரிபைரோவுக்கு அளிக்க அவர் வலது காலால் கோலுக்குள் திணிக்க பிரேசில் 3-0. பிறகு 93வது நிமிடத்தில் ரிகார்லிசன் அடித்த ஷாட் 4வது கோலாக மாறியது. பிரேசில் 4-0 வெற்றி.

    நெய்மார் தன் 68வது கோல் மூலம் முன்னாள் பிரேசில் நட்சத்திரம் ரொனால்டோவைக் கடந்து அனைத்து கால அதிக கோல்கள் அடித்த பிரேசில் வீரர் ஆனார்.
    Published by:Muthukumar
    First published: