முகப்பு /செய்தி /விளையாட்டு / Copa America 2021| கோப்பா அமெரிக்கா 2021- அர்ஜெண்டீனாவுக்கு அதிர்ச்சியளிக்குமா கொலம்பியா? - நேருக்கு நேர் புள்ளி விவரங்கள்

Copa America 2021| கோப்பா அமெரிக்கா 2021- அர்ஜெண்டீனாவுக்கு அதிர்ச்சியளிக்குமா கொலம்பியா? - நேருக்கு நேர் புள்ளி விவரங்கள்

மெஸ்ஸி.

மெஸ்ஸி.

கோப்பா அமெரிக்கா 2021 கால்பந்து தொடரின் 2வது அரையிறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு நடைபெறும். 2வது அரையிறுதியில் அர்ஜென்டினா - கொலம்பியா அணிகள் மோதுகின்றன.

  • Last Updated :

கோப்பா அமெரிக்கா 2021 கால்பந்து தொடரின் 2வது அரையிறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு நடைபெறும். 2வது அரையிறுதியில் அர்ஜென்டினா - கொலம்பியா அணிகள் மோதுகின்றன.

முன்னதாக இன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் பிரேசில் அணி பெரூ அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. லீக் சுற்றின் முதல் ஆட்டத்தில் சிலியுடன் டிரா செய்த அந்த அணி, பின்னர் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது. கேப்டன் லியோனல் மெஸ்ஸி, ஏஞ்சல் டி மரியா, கோல்கீப்பர் எமிலியனோ, லிசாண்ட்ரோ, கோம்ஸ் என்று அர்ஜென்டீனா அணியில் பலரும் செம பார்மில் இருக்க, கொலம்பியா அணியும் இதுவரை நன்றாக ஆடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

வலுவான உருகுவேயை ஆட்டம் முடியும் வரை கோலடிக்க விடாததுடன், பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. கொலம்பியா அணியில் கேப்டனும் கோல் கீப்பருமான டேவிட் ஆஸ்பினோவைக் கடந்து கோல் அடிப்பது மெஸ்ஸி போன்றவர்களுக்கே சிரமமான காரியம்.

Also Read: Copa America 2021 | கோப்பா அமெரிக்கா இறுதியில் பிரேசில்: 3 தடுப்பாட்ட வீரர்களுக்கு ஆட்டம் காட்டிய நெய்மார்; பெரூவை 1-0 என்று வீழ்த்தியது

மிகுயல் போர்ஜா, துவன் ஸ்பாதா எல் ஆஸ்கர் முரியலோ, குஸ்டோவோ குயெலார், லூயிஸ் டியஸ் என பலரும் கை கொடுப்பார்கள் என்பதால் அர்ஜென்டினாவும் நிச்சயம் சவாலை சந்திக்க வேண்டி இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மெஸ்ஸி இந்தத் தொடரில் 8 கோல்களை இதுவரை அடித்துள்ளார், ஃப்ரீ கிக்குகளில் மட்டும் 58 கோல்களை அடித்துள்ளார் மெஸ்ஸி. மேலும் அர்ஜெண்டீனா அடித்த கோல்களில் ஏறக்குறைய எல்லா கோல்களிலும் மெஸ்ஸியின் பங்கு உண்டு. இவருக்கு அடுத்ததாக நெய்மார் 4 கோல்களை அடித்துள்ளார்.

மெஸ்ஸியின் ஃப்ரீ கிக் கோலுக்குள் செல்லும் காட்சி. | கோப்பா அமெரிக்கா

இரு அணிகளும் இதுவரை 40 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன, இதில் அர்ஜெண்டினா கை மேலோங்கி 23 போட்டிகளில் கொலம்பியாவை வென்றுள்ளது. கொலம்பியா அணி 9 முறை அர்ஜெண்டீனாவை வென்றுள்ளது.

Lionel Messi
மெஸ்ஸி

top videos

    கடந்த மாதம் இரு அணிகளும் கடைசியாக மோதிய போட்டியில் ஆட்டம் 2-2 என்று ட்ரா ஆனது. கொலம்பியா அணி அர்ஜெண்டீனாவுடனான கடந்த 7 போட்டிகளில் 2 கோல்களை மட்டுமே கொலம்பியா அடித்துள்ளது.

    First published:

    Tags: Argentina, Football