Copa America 2021: மெஸ்ஸியின் சாதனைப் போட்டி: கோப்பா அமெரிக்கா காலிறுதிக்குள் அர்ஜெண்டீனா நுழைவு

மெஸ்ஸி

தென் அமெரிக்க கால்பந்து திருவிழாவான கோப்பா அமெரிக்கா தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்ஜெண்டீனா அணி தகுதி பெற்றது, பராகுகாவை 1-0 என்று போராடி வீழ்த்தியது அர்ஜெண்டீனா.

  • Share this:
    நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது சாதனையான 147வது போட்டியில் ஆடினார். பிரேசிலியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பெற்ற 1-0 வெற்றி இந்த கோப்பா அமெரிக்கா தொடரில் தொடர்ச்சியாக 1-0 என்று பெறும் வெற்றியாகும். 2019-ல் கோப்பா அமெரிக்கா அரையிறுதியில் தோற்றதற்குப் பிறகு அர்ஜெண்டினா 16 போட்டிகள் ஆடி தோல்வி பெறாமல் சாதனை ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

    இந்த வெற்றி மூலம் பிரிவு ஏ-யில் 7 புள்ளிகளுடன் டாப் இடத்தில் உள்ளது அர்ஜெண்டீனா. சிலி அணி 2ம் இடத்தில் உள்ளது. பராகுவா அணி 3ம் இடத்திலும் உருகுவே அணி 4ம் இடத்திலும் உள்ளன. பொலிவியா அணி புள்ளிகளே இல்லாமல் கடைசி இடத்தில் உள்ளது.

    25 ஆட்டங்களில் கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜெண்டினாவை பராகுவா வென்றதேயில்லை. 10-வது நிமிடத்தில் அலேயாண்ட்ரோ கோம்ஸ் முதல் கோலை அடித்தார் அதுவே வெற்றிக்கான கோலாக அமைந்தது. ஆஞ்செல் டி மரியா மிகப்பிரமாதமான ஒரு துல்லிய பாஸை அளிக்க கோம்ஸ் அதனை டைவ் அடித்த பராகுவா கோல் கீப்பரைக் கடந்து கோல் வலைக்குள் அடித்தார்.

    இந்த பாஸ் பற்றி கோம்ஸ் கூறும்போது, “ஆஞ்செல் டி மரியாவின் பாஸ் அருமை நான் வெறுமனே தொட்டால் போதும்” என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இடைவேளைக்கு சற்று முன்னர் பராகுவா வீரர் ஜூனியர் அலான்சோ சேம்சைடு கோல் அடித்தார். ஆனால் வீடியோ ரிவியூ மூலம் இது கோல் இல்லை என்று மறுக்கப்பட்டது பராகுவா அதிர்ஷ்டம், அர்ஜெண்டீனாவின் துரதிர்ஷ்டம்.

    இடைவேளைக்குப் பிறகு மிகுவெல் அல்மிரான் இடது ஓரத்தில் அபாயகரமாக ஆடினார். பந்து பராகுவா வசம் அதிகம் இருந்தாலும் அதை கோல் வாய்ப்புகளாக மாற்றவில்லை. சிலி, உருகுவே அணிகளுக்கு எதிராக போட்டிகளை பராகுவா ஆட வேண்டியுள்ளது.

    டிமரியாவும் மெஸ்ஸியும் அபாரமாக ஆடினர். அர்ஜெண்டீனா அணிக்காக 147வது போட்டியை ஆடி மெஸ்ஸி, ஜேவியர் மஸ்செரானோ சாதனையை சமன் செய்தார்.

    மெஸ்ஸியும் டிமரியாவும் கொடுத்த குடைச்சல் ஆட்டத்தில் பராகுவா அணி 23 முறை ஃபவுல் செய்தது, மாறாக அர்ஜெண்டீனா 11 முறை தவறிழைத்தது.
    Published by:Muthukumar
    First published: