Copa America 2021 கால்பந்து: மெஸ்ஸியைத் தூக்கி சாப்பிடும் 5 வீரர்கள் யார்?

மெஸ்ஸி

கோப்பா அமெரிக்கா 2021 கால்பந்து போட்டிகள் வரும் 14ம் தேதி தொடங்குகிறது. போட்டிகள் பிரேசிலில் நடைபெறுகின்றன. அர்ஜெண்டினா, உருகுவே, கொலம்பியா, சிலி போன்ற பெரிய அணிகள் மோதவிருக்கும் போட்டித் தொடராகும் இது.

  • Share this:
    அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி ஒரு ஸ்டாராக எதிர்பார்க்கப்படுகிறார். உலகக்கோப்பையை வெல்வதை விட கோப்பா அமெரிக்காவை வெல்ல வேண்டும் என்பது தென் அமெரிக்க நாட்டு ர்சிகர்களின் எதிர்பார்ப்பாகும், ஒவ்வொரு அணியுமே கோப்பா அமெரிக்காவை வெல்ல கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ளும்.

    Also Read: Copa America 2021 | கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடர்: அணிகள், இந்திய நேரப்படி போட்டி அட்டவணை- எந்தத் தொலைக்காட்சியில் லைவ்?

    இந்த நிலையில் லியோனல் மெஸ்ஸி தவிர இந்தப் போட்டித் தொடரில் மெஸ்ஸியையே தூக்கிச் சாப்பிடும் 5 வீரர்கள் பற்றி பார்ப்போம்:

    எடிசன் கவானி (Edinson Cavani) - உருகுவே

    உருகுவேவைச் சேர்ந்த எடிசன் கவானி இங்கிலிஷ் பிரிமியர் லீகில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ஆடுபவர். அந்த அணியின் சிறந்த வீரர்களுள் ஒருவராக அவர் கடந்த சீசனில் எழுச்சி பெற்றார்.

    13 போட்டிகளில் 10 கோல்களையும் 3 கோல்களுக்கு அசிஸ்டும் செய்துள்ளார். இவரது திகைப்பூட்டும் ஆட்டத்தினால் ஐரோப்பிய லீகில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை இறுதிப் போட்டிக்கு இட்டுச் சென்றது. ஆனால் இவருக்கு வயது 34 என்பதும் கவனிக்கத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இவர் தனது மான்செஸ்டர் யுனைடெட் ஆட்டத்திறனை கோப்பா அமெரிக்காவில் காட்டினால் உருகுவே அணி நிச்சயம் ஒரு சவாலான அணியாகவே இருக்கும்.

    லாரோ மார்ட்டினேஸ்- அர்ஜெண்டினா:

    மார்ட்டினேஸ்.


    லியோனல் மெஸ்ஸியின் சக வீரர் லாரோ மார்ட்டினேஸ். உலகக் கால்பந்தில் இளம் வீரர் மார்ட்டினேஸ். இண்டெர்மிலன் அணிக்காக மார்ட்டினேஸ் செம பார்மில் ஆடினார். இந்த சீசனில் கிளப் கால்பந்தில் 17கோல்களுடன் 6 கோல்களுக்காக உதவி புரியும் அசிஸ்ட் செய்துள்ளார். லியோனல் மெஸ்ஸிக்கு இப்போது வயது 33, மெஸ்ஸிக்கு அடுத்ததாக அர்ஜெண்டினாவில் எதிர்பார்க்கப்படும் வீரர் லாரோ மார்ட்டினேஸ்.

    Also Read: Euro 2020 Italy vs Turkey : இத்தாலி 3-0 என ஆதிக்க வெற்றி; ஓன் கோலால் சறுக்கிய துருக்கி

    காஸ்மிரோ- பிரேசில்

    உலகக் கால்பந்தில் மிகப்பிரமாதமான தடுப்பு மிட்ஃபீல்டர் என்ற பெயர் காஸ்மிரோவுக்கு உண்டு. ரியால் மேட்ரிட் அணிக்காக 286 முறை ஆடியுள்ளார் காஸ்மிரோ. ஜினடின் ஜிடேன் பயிற்சியின் கீழ் பயின்றவர். 29 வயதாகும் காஸ்மிரோ மிகவும் ஆக்ரோஷமான வீரர். தொலைவிலிருந்து கோலை நோக்கி சக்தி வாய்ந்த ஷாட்களை ஆடுபவர்.

    பிரேசிலுக்காக 50 ஆட்டங்களில் ஆடியுள்ளார். இவரது அனுபவம் நிச்சயம் பிரேசிலுகு வலுசேர்க்கும்

    லூயி சுவாரேஸ் (உருகுவே):

    நவீன கால்பந்தில் சிறந்த ஸ்ட்ரைக்கர்களில் ஒருவர். கோப்பா அமெரிக்காவில் எடிசன் கவானியும் , சுவாரேஸும் உருகுவே அணிக்கு ஆக்ரோஷ ஆட்டம் மூலம் பலம் சேர்ப்பார்கள். லா லிகாவில் கடந்த சீசனில் சுவாரேஸ் 21 கோல்களை அடித்தார். 2011-ல் கோப்பா அமெரிக்கா சாம்பியனான உருகுவே அணியில் இருவரும் இருந்தனர்.

    நெய்மார் - பிரேசில்

    நெய்மார். பிரேசில்.


    உலகின் சிறந்த வீரர்கள் பட்டியலில் உள்ள மெஸ்ஸி, ரொனால்டோ உள்ளிட்டவர்களுடன் நெய்மார் பெயரையும் சேர்க்கலாம். 105 ஆட்டங்களில் 66 கோல்கள் அடித்துள்ளார் நெய்மார். முன் களத்தில் அபாயகரமான வீரர் இவர். ஒன்றுமில்லாத இடத்திலிருந்து ஆட்டத்தை மாற்றக்கூடியவர். நிச்சயம் இவர் மீது ரசிகர்களின் கவனம் அதிகமே இருக்கும்.
    Published by:Muthukumar
    First published: