ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தொடர்ந்து பிரகாசியுங்கள் சிந்து - சுவிஸ் ஓபன் வென்ற சிந்துவுக்கு கோலி வாழ்த்து

தொடர்ந்து பிரகாசியுங்கள் சிந்து - சுவிஸ் ஓபன் வென்ற சிந்துவுக்கு கோலி வாழ்த்து

கோலி

கோலி

சுவிட்சர்லாந்து ஓபன் சர்வதேச பாட்மிண்டன் தொடரில் பட்டம் வென்ற இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்துவுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சுவிட்சர்லாந்து ஓபன் சர்வதேச பாட்மிண்டன் தொடரில் பட்டம் வென்ற இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்துவுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

  சுவிட்சர்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள பாசெல் நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் புசனன் ஓங்பாம்ருங்பானை எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21-16, என்று முதல் செட்டையும் பிறகு 21-8 என்று இரண்டாவது செட்டையும் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

  தற்போது சுவிஸ் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் , " சுவிட்சர்லாந்து ஓபன் தொடரில் பட்டம் வென்றதற்கு வாழ்த்துக்கள் . தொடர்ந்து பிரகாசித்துக் கொண்டே இருங்கள்" என பதிவிட்டுள்ளார்.

  நேற்று ஆர்சிபி ஐபிஎல் 2022-ன் முதல் போட்டியில் ஆடியது, மந்தமாகப் போய்க்கொண்டிருந்த ஆர்சிபி பேட்டிங்குக்கு விராட் கோலி தன் 29 பந்து 41 ரன்களினால் புத்துயிர் அளித்தார், இவர் வந்த பிறகுதான் டுபிளெசிஸ் வெளுத்து வாங்கி 7 சிக்சர்களை விளாசினார். கடைசியில் விராட் கோலி இருக்கும் தைரியத்தில்தான் தினேஷ் கார்த்திக் 14 பந்த்களில் 32 ரன்கள் விளாசினார். ஆனாலும் ஆர்சிபி தோல்வியுற்றது, கோலி பார்முக்குக் குறைவில்லை

  Published by:Muthukumar
  First published:

  Tags: P.V.Sindhu, Virat Kohli