Home /News /sports /

Commonwealth Games 2022: காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்ற மீராபாய் சானு

Commonwealth Games 2022: காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்ற மீராபாய் சானு

மீராபாய் சானு

மீராபாய் சானு

Mirabai Chanu: காமன்வெல்த் தொடரில் ஹாட்ரிக் பதக்கம் வென்று மீராபாய் சானு வியக்க வைத்துள்ளார்.

    காமன்வெல்த் போட்டியின் பளுதூக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானு, சாதனை தங்கம் வென்றார். காமன்வெல்த் தொடரில் அவர் வெல்லும் மூன்றாவது பதக்கம் இதுவாகும்.

    இங்கிலாந்தின் பர்மிங் ஹாம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மகளிர் 49 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதலில், இந்தியாவின் மீராபாய் சானு களம் கண்டார். இவர், ஸ்னாட்ச் பிரிவில் 88 கிலோ எடையை தூக்கி, சக போட்டியாளர்கள் நெருங்க முடியாத அளவிற்கு முன்னிலை வகித்தார். இதேபோன்று கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவிலும் 113 கிலோ எடை தூக்கி மிரட்டினார்.

    ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவு இரண்டிலும் சேர்த்து மொத்தம் 201 கிலோ எடை தூக்கி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். அத்துடன், தனது சிறந்த சாதனையுடன், காமன்வெல்த் போட்டியில் புதிய சாதனையும் படைத்தார். கிளாஸ்கோ காமன்வெல்த்தில் வெள்ளி வென்ற இவர், 2018-ல் கோல்டுகோஸ்ட்டில் தங்கம் வென்றார். தற்போது மீண்டும் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டதன் மூலம் காமன்வெல்த் தொடரில் ஹாட்ரிக் பதக்கம் வென்று வியக்க வைத்துள்ளார்.

    காமன் வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை பிந்த்யா ராணி தேவி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மகளிருக்கான 55 கிலோ எடை பிரிவில், மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளி பதக்கத்தை வசப்படுத்தினார். தாம் முதன் முதலாக பங்கேற்றுள்ள காமன்வெல்த் தொடரில், வெள்ளி வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக பிந்த்யா ராணி தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: காமன்வெல்த் கிரிக்கெட்: வெற்றியின் பிடியை நழுவ விட்டு தோல்வி- இந்திய மகளிர் அணி சோகம்

    முன்னதாக, ஆடவருக்கான 55 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்திய வீரர் சங்கேத் மகாதேவ் சர்கர் களம் புகுந்தார். இப்போட்டியில், ஸ்னாட்ச் பிரிவில் 113 கிலோ எடை தூக்கி அசர வைத்தார். இதையடுத்து, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் முதல் வாய்ப்பிலேயே 135 கிலோ எடை தூக்கி கவனம் ஈர்த்தார். ஆனால், அடுத்த இரு வாய்ப்புகளிலும் சங்கேத் மகாதேவ் சறுக்கினார்.

    இதனால் நூலிழையில் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். ஸ்நாட்ச் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் இரு பிரிவுகளிலும் மொத்தம் 248 கிலோ எடை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார். இதன் மூலம், நடப்பு காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார்.

    மேலும் படிக்க: செஸ் ஒலிம்பியாட் : முதல் சுற்றில் எதிரணிகளை வாஷ்-அவுட் செய்த இந்திய வீரர் வீராங்கனைகள்!

    மேலும், 61 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் குருராஜ் புஜாரியா களமாடினார். இவர், ஸ்நாட்ச் பிரிவில் 118 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 151 கிலோ எடையும் தூக்கினார். மொத்தம் 269 கிலோ எடை தூக்கி மூன்றாம் இட்ம் பிடித்து, வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தினார்.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Commonwealth Games, Gold, Sports

    அடுத்த செய்தி