முகப்பு /செய்தி /விளையாட்டு / ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு: சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடம்!

ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு: சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடம்!

கடந்த 16 நாட்களாக நடந்து வந்த ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன.

கடந்த 16 நாட்களாக நடந்து வந்த ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன.

கடந்த 16 நாட்களாக நடந்து வந்த ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வந்த 32வது ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்று உள்ளது. இதற்கான நிறைவு விழா கொண்டாட்டங்கள் அங்கு விமர்சையாக நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்றவர்களில் முதலாவதாக மீராபாய் சானு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதைத்தொடர்ந்து, மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, வெண்கலம் வென்றார்.

தொடர்ந்து, பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69), இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலம் வென்றார். அதைத்தொடர்ந்து, இந்திய ஆடவர் ஹாக்கி அணி, வெண்கல பதக்கம் வென்றது. மல்யுத்த போட்டியில் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

தொடர்ந்து, மல்யுத்த ஆட்டத்தில் இந்தியாவின் பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதையடுத்து, இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக இருந்தது. இறுதியாக, ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா. கடைசி நாளில் மட்டும் 2 பதக்கங்களை இந்தியா வென்றது.

இதைத்தொடர்ந்து, ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்கள் வென்றது. ஒலிம்பிக் போட்டியில், அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் டாப் 3 இடங்களை பெற்றுள்ளன.

இதனிடையே, பதக்கப்பட்டியலில் இறுதி நாளில் 3 தங்க பதக்கங்களை வென்று சீனாவை அமெரிக்கா பின்னுக்கு தள்ளியது. மொத்தம் 39 தங்க பதக்கம், 41 வெள்ளி பதக்கம், 33 வெண்கலப் பதக்கம் என 113 பதக்கங்களை அமெரிக்கா பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து, 38 தங்கப் பதங்கங்கள், 32 வெள்ளி பதக்கங்கள், 18 வெண்கலப் பதக்கம் என 88 பதக்கங்களை பெற்று 2வது இடத்தை சீனா பெற்றுள்ளது.

தொடர்ந்து, 27 தங்கப் பதக்கம், 14 வெள்ளிப் பதக்கம், 17 வெண்கலப் பதக்கம் என 58 பதக்கஙளை பெற்று ஜப்பான் 3வது இடத்தை பெற்றுள்ளது.

இந்த பதக்கப் பட்டியலில் இந்தியா 48வது இடத்தில் உள்ளது.

First published:

Tags: Tokyo Olympics